இந்தியா

எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு அதிகரிக்குமா? தனியார் கல்லூரிகளிடம் வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டிற்கு கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் இடங்களை தர வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் அரசுவலியுறுத்தி உள்ளது.அதனால், எம்.பி.பி.எஸ்., படிப்பில் இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி, இந்திரா காந்தி அரசு மருத்துவக்
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் அரசு ஒதுக்கீடு அதிகரிக்குமா? தனியார் கல்லூரிகளிடம் வலியுறுத்தல்

புதுச்சேரி : மருத்துவப் படிப்பில் அரசு ஒதுக்கீட்டிற்கு கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் இடங்களை தர வேண்டும் என தனியார் மருத்துவக் கல்லுாரிகளிடம் அரசுவலியுறுத்தி உள்ளது.அதனால், எம்.பி.பி.எஸ்., படிப்பில் இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி, ஏழு தனியார் மருத்துவக் கல்லுாரிகள் என மொத்தம் 9 மருத்துவக் கல்லுாரி கள் உள்ளன.இதில் ஜிப்மர் மற்றும் மகாத்மா காந்தி, அறுபடை வீடு, விநாயகா மிஷன், லட்சுமிநாராயணா உள்ளிட்ட நான்கு நிகர்நிலை பல்கலை கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நேரடியாக நிரப்பப்படு கின்றன.

இந்த இடங்கள், டி.ஜி. எச்.எஸ்., எனப்படும், மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி (எம்.சி.சி.,) மூலம் நிரப்பப்படும்.மீதமுள்ள மணக்குள விநாயகர், பிம்ஸ், வெங்கடேஸ்வரா ஆகிய மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆண்டுதோறும் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

கடந்தாண்டு இந்த மூன்று தனியார் கல்லுாரிகளில் மொத்தமுள்ள 450 எம்.பி.பி.எஸ்., சீட்டுகளில் தலா 55 சீட்டுகள் வீதம் 165 சீட்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக பெறப்பட்டன.இந்தாண்டிற்கான எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் எத்தனை என்பது இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது.

சமீபத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த உடன்பாடும் எட்டப் படவில்லை.கடந்தாண்டை காட்டி லும் புதுச்சேரி மாணவர்களுக்கு கூடுதல் எம்.பி. பி.எஸ்., இடங்களைத் தர வேண்டும் என அரசு தரப்பில், தனியார் மருத்துவக் கல்லுாரி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

குறிப்பாக, கடந்தாண்டை காட்டிலும் 5 எம்.பி.பி.எஸ்., சீட்களை கூடுதலாக, அதாவது 170 சீட்களை தர வேண்டும் என அரசு அழுத்தம் கொடுத்து வலியுறுத்தி உள்ளது.அதனால், இந்தாண்டு அரசு ஒதுக்கீட்டிற்கு கூடுதல் சீட்கள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள 150 எம்.பி.பி.எஸ்., சீட்களில் 137 இடங்கள் அரசு ஒதுக்கீடாக நிரப்பப்பட உள்ளது.முறைப்படி தனியார் கல்லுாரிகள் அரசு ஒதுக்கீட்டு இடங்களை வழங்கியதும், இட ஒதுக்கீடு அடிப்படையில் சென்டாக் மூலம் நிரப்பப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X