இந்தியா

மழை பாதிப்புகளை ஆய்வு செய்த சப் கலெக்டரின் கார் சிறை பிடிப்பு 

Added : நவ 13, 2021
Share
Advertisement
பாகூர் : மழை பாதிப்புகளை பார்வையிட சென்ற சப் கலெக்டர் காரை, பொது மக்கள் சிறை பிடித்ததால், பரபரப்பு நிலவியது.தொடர் மழை காரணமாக பாகூர், அதனை சுற்றி யுள்ள கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.தெற்கு மாவட்ட சப் கலெக்டர் ரிஷிதா குப்தா, உதவி கலெக்டர்
 மழை பாதிப்புகளை ஆய்வு செய்த   சப் கலெக்டரின் கார் சிறை பிடிப்பு 

பாகூர் : மழை பாதிப்புகளை பார்வையிட சென்ற சப் கலெக்டர் காரை, பொது மக்கள் சிறை பிடித்ததால், பரபரப்பு நிலவியது.

தொடர் மழை காரணமாக பாகூர், அதனை சுற்றி யுள்ள கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.தெற்கு மாவட்ட சப் கலெக்டர் ரிஷிதா குப்தா, உதவி கலெக்டர் கிரி சங்கர் ஆகியோர் கிருமாம்பாக்கத்தில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.அப்போது, கூடுதல் மோட்டார்கள் மூலம் மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். கிருமாம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மத்திய சமையல் கூட்டத்தை ஆய்வு செய்தனர். அப்போது, சமையல் கூட ஊழியர்கள் தங்களுக்கு நிலுவை சம்பளம் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து, பொது மக்கள் மழை பாதிப்பை உடனே பார்க்கவில்லை எனக்கூறி, சப் கலெக்டர் காரின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.பின், குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு பகுதியை பார்வையிட்டு, இருளஞ்சந்தை கிராமத்தில் இருளர் குடியிருப்பு பகுதி அருகே சப் கலெக்டர் சென்றார்.

அப்போது, அப்பகுதி மக்கள் காரினை மீண்டும் சிறை பிடித்து, 'மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தபோது, எங்களை யாரும் வந்து பார்க்கவில்லை. மழை நீர் வடிந்த பின் பார்க்க வந்துள்ளீர்கள் என, கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த செந்தில் குமார் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களிடம் பேசி சமாதானம் செய்ததை ஏற்று கலைந்து சென்றனர்.தொடர்ந்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ.,வுடன் இணைந்து சப் கலெக்டர் ரிஷிதா குப்தா, இருளர் குடியிருப்பு பகுதியை ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X