இந்தியா

நாளை பாதுகாப்பு படை தேர்வு; 412 மாணவர்கள் எழுதுகின்றனர்

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மையத்தில் நாளை நடக்கும் பாதுகாப்பு படை தேர்வினை 412 மாண வர்கள் எழுத உள்ளனர்.மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தேர்வு-2 மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-2 நாளை 14ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.இத்தேர்விற்கு புதுச்சேரி மாநிலம் தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டு, மூன்று இடங்களில்

புதுச்சேரி : புதுச்சேரி மையத்தில் நாளை நடக்கும் பாதுகாப்பு படை தேர்வினை 412 மாண வர்கள் எழுத உள்ளனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தேர்வு-2 மற்றும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-2 நாளை 14ம் தேதி நாடு முழுவதும் நடக்கிறது.இத்தேர்விற்கு புதுச்சேரி மாநிலம் தேர்வு மையமாக தேர்வு செய்யப்பட்டு, மூன்று இடங்களில் தேர்வு நடக்கிறது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை தேர்வு-2 லாஸ்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் காலை 9 முதல் 11 மணி வரையும், மதியம் 12 முதல் 2 மணி வரையும், 3 முதல் மாலை 5 மணி வரையும் மூன்று அமர்வுகளாக நடக்கின்றது. 225 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு-2 லாஸ்பேட்டை வள்ளலார் மேனிலைப் பள்ளி, விவேகானந்தா மேனிலைப்பள்ளியில் காலை 10 முதல் 12.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரையும் நடக்கிறது.

187 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.மொத்தமாக 412 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், மாணவ மாணவிகளின் வசதிக்காக, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தேர்வு மையங்களுக்கு காலை 7.30 முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 5.30 மணி வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.தேர்வு துவங்க 10 நிமிடங்களுக்கு முன், தேர்வு மையங்கள் மூடப்பட்டுவிடும். அதன் பிறகு எந்த மாணவர்களும் அனுமதிக்கப்படமாட் டார்கள். மேலும் விபரங்களுக்கு 0413-2233228 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை புதுச்சேரி நிர்வாக சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X