இந்தியா

மொரட்டாண்டி கோவிலில் இன்று குருபெயர்ச்சி விழா

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், இன்று குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.குரு பகவான் இன்று 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள 12 அடி உயர குருபவானுக்கு, மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடக்கிறது.இன்று 13ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை,

புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், இன்று குருப்பெயர்ச்சி விழா நடக்கிறது.

குரு பகவான் இன்று 13ம் தேதி மாலை 6:21 மணிக்கு மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.இதையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள 12 அடி உயர குருபவானுக்கு, மகா யாகம் மற்றும் லட்ச்சார்ச்சனை நடக்கிறது.இன்று 13ம் தேதி காலை 7:30 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1,008 கொழுக்கட்டை நிவேத்தியம், 30 விதமான அபிேஷகம் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.

குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், மகா பூர்ணஹூதி, ராசி பரிகார ஹோமம், 1,008 லிட்டர் பால் அபிேஷகம், மாலை 3:00 மணிக்கு கலச அபி ேஷகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிதம்பரம் குருக்கள், கீதாசங்கர மற்றும் கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X