இந்தியா

ஆபத்தான கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவு

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : பெரிய மார்க்கெட் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆபத்தான கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, வைசியாள் வீதியை சேர்ந்தவர் சரவணன், 47. இவருக்கு சொந்தமான 150 ஆண்டு கால கட்டடம், ரங்கப்பிள்ளை வீதியில், பெரியமார்க்கெட் 12-வது நுழைவு வாயிலை ஒட்டியுள்ளது.இக்கட்டடம் கீழ் தளத்தில் ஐந்து கடைகளும், முதல் தளமும் கொண்டுள்ளது. பழமையான

புதுச்சேரி : பெரிய மார்க்கெட் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆபத்தான கட்டடத்தை இடிக்க நகராட்சி உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, வைசியாள் வீதியை சேர்ந்தவர் சரவணன், 47. இவருக்கு சொந்தமான 150 ஆண்டு கால கட்டடம், ரங்கப்பிள்ளை வீதியில், பெரியமார்க்கெட் 12-வது நுழைவு வாயிலை ஒட்டியுள்ளது.இக்கட்டடம் கீழ் தளத்தில் ஐந்து கடைகளும், முதல் தளமும் கொண்டுள்ளது. பழமையான இக்கட்டடத்தின் மேல்தளத்தில் யாரும் வசிக்கவில்லை. கீழ்தளத்தில் கரும்பு ஜூஸ், காய்கறி கடைகள் இயங்கி வந்தன. இந்த கட்டடத்தின் மேற்கு சுவரின் ஒரு பகுதி நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது.

அப்போது கடையினுள் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.தகவல் அறிந்து வந்த பெரியக்கடை போலீசார் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரங்கப்பிள்ளை வீதியில் பேரிகார்டு அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்தனர்.புதுச்சேரி தாசில்தார் குமரன், நகராட்சி அதிகாரிகள் இடிந்து விழுந்த கட்டடத்தை பார்வையிட்டனர்.

ஆபத்தான கட்டடத்தை உடனே இடித்து அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டு, அதற்கான ஆணையை அங்கேயே வழங்கினர்.கட்டடத்தில் கடைகளில் இருந்த பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன. கட்டடத்தின் மின்சாரம், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, இடிப்பு பணி நள்ளிரவில் துவங்கியது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் மக்கள் கூட்டம் எந்நேரமும் அதிகமாக இருக்கும். அவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளோம். அதுவரை ரங்கப்பிள்ளை வீதியில் பாரதி வீதியில் இருந்து மகாத்மா காந்தி வீதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X