செல்லிப்பட்டு படுகை அணை எம்.பி., பார்வையிட்டு ஆய்வு| Dinamalar

இந்தியா

செல்லிப்பட்டு படுகை அணை எம்.பி., பார்வையிட்டு ஆய்வு

Added : நவ 13, 2021
Share
திருக்கனுார் : சேதமடைந்து வரும் செல்லிப்பட்டு படுகை அணையை செல்வகணபதி எம்.பி., பார்வையிட்டார். புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ல் பிரெஞ்சியர் காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் பயனடைகின்றனர்.போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016ம் ஆண்டு பெய்த கனமழையின் போது,

திருக்கனுார் : சேதமடைந்து வரும் செல்லிப்பட்டு படுகை அணையை செல்வகணபதி எம்.பி., பார்வையிட்டார்.

புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906ல் பிரெஞ்சியர் காலத்தில் படுகை அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள், பொதுமக்கள் பயனடைகின்றனர்.போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, படுகை அணை சேதமடைந்தது. தொடர்ந்து, பொதுப்பணித் துறை நீர்பாசன பிரிவு மூலம் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கி வைத்து சீரமைக்கப்பட்டது.

தற்போது தொடர் கனமழை காரணமாக, வீடூர் அணை திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், செல்லிப்பட்டு படுகையணையின் சேதம் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், படுகை அணையை செல்வகணபதி எம்.பி., அங்காளன் எம்.எல்.ஏ., ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். அப்போது, அதிகாரிகளிடம் படுகையணையின் உறுதி தன்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின்போது, மாநில பாஜ., தலைவர் சாமிநாதன், துணைத் தலைவர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலாளர் மோகன்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X