இந்தியா

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம்: ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த பத்து நாட்க ளுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர் எனப்படும் ஆட்டோ, லோடு கேரியர் ஓட்டுனர்கள் சாலையோரங்களில்

புதுச்சேரி : அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த பத்து நாட்க ளுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர் எனப்படும் ஆட்டோ, லோடு கேரியர் ஓட்டுனர்கள் சாலையோரங்களில் கடை வைத்துள்ளவர்கள், கடைகளில் வேலை செய்பவர்கள்,சலவையாளர், முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்பவர்கள், தையல் வேலை செய்பவர்கள், சமையல் வேலை செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி கஷ்டப்படுகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மழைக்கால நிவாரணமாக விவசாய நிலங்களுக்கு நிவாரணம்,மீனவர் மற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளார். இதனை வரவேற்கிறோம்.அதேபோல் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X