இந்தியா

மழையால் மக்கள் பாதிக்காதவாறு தொலை நோக்கு திட்டம் தேவை: எம்.எல்.ஏ., செந்தில்குமார் வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மழை காலங்களில் நகர மக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு தொலைநோக்குத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என, பாகூர் எம்.எல்.ஏ., செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் தொடர் மழையினால் நகர் புறங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்து மக்கள்

புதுச்சேரி : மழை காலங்களில் நகர மக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு தொலைநோக்குத் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என, பாகூர் எம்.எல்.ஏ., செந்தில் குமார் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் தொடர் மழையினால் நகர் புறங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ளது. பல இடங்களில் வெள்ளநீர் புகுந்து மக்கள் அவதிப்பட்டனர்.ஒவ்வொரு பெருமழையின் போதும் இப்பகுதி மக்கள் தங்களின் உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ள பாடுபட வேண்டி இருக்கிறது. நகரில் இந்த நிலை என்றால், கிராமப் பகுதி களில் வெள்ள நீரால் விளைநிலங்கள் சூழப்பட்டு விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் நிலை வாடிக்கையாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்குவதால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்படுகிறது. கிராமங்களில் குடியிருப்புகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராம மக்கள் பாதித்துள்ளனர். நகர பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களின் ஆக்கிரமிப்பை அகற்றி துார்வாரி கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.மழைக்காலத்திற்கு முன்பே இதை செய்திருக்க வேண்டும். பொதுப்பணி, உள்ளாட்சி, மின்துறை ஆகிய துறைகள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும். கிராம பகுதி களில் பாசன வாய்க்கால்கள் புதர்மண்டி கிடப்பதால், மழைநீர் வடிய வழியில்லாமல் பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. பாசன வாய்க்கால்களை துார்வாரி, பழுதடைந்த மதகுகளை புதுப்பித்து, முறையாக பராமரித்து வந்தால் இந்த நிலை வந்திருக்காது. மழைக் காலங்களில் நகர மக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்காதவாறு தொலைநோக்குத் திட்டத்தை புதுச்சேரி அரசு தயாரித்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X