இந்தியா

மழை நிவாரணமாக ரூ.300 கோடி அ.தி.மு.க., செயலர் கோரிக்கை

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மழை நிவாரண உதவிக்கு ரூ. 300 கோடி மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என, அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை;புதுச்சேரியில் தொடர் மழையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பளம், உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜர் நகர், உழவர்கரை, வில்லியனுார் உள்ளிட்ட பல தொகுதிகளில் தாழ்வான

புதுச்சேரி : மழை நிவாரண உதவிக்கு ரூ. 300 கோடி மத்திய அரசிடம் கேட்க வேண்டும் என, அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை;புதுச்சேரியில் தொடர் மழையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உப்பளம், உருளையன்பேட்டை, முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, காமராஜர் நகர், உழவர்கரை, வில்லியனுார் உள்ளிட்ட பல தொகுதிகளில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து, உடைமைகள் சேதமடைந்துள்ளது.மீனவ மக்கள் வசிக்கும் பகுதியில் கடல்நீர் புகுந்து சேதம் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மழைகால நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. வருவாய்த்துறை இதுவரை பாதிப்புகள் குறித்து முழு மையான கணக்கெடுப்பு நடத்தவில்லை.கலெக்டர் 24 கூரை வீடுகள் சேதமடைந்துள்தாக தெரிவிப்பது பொருப்பற்ற அறிவிப்பு. இதனால் எதிர்காலத்தில் மத்திய அரசிடம் இருந்து அதிக நிவாரண நிதி பெற முடியாத சூழல் ஏற்படும்.மழைக்கால நிவாரண உதவித்தொகையாக 300 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்க வேண்டும். அதற்கான நிவாரண வரைவு திட்ட அறிக்கை தயாரித்து, டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணாராவ் மூலம் மத்திய அரசிடம் இருந்து பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X