இந்தியா

நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றி சமுதாய நலக்கூடம் கட்டப்படுமா?

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருபுவனை : ஆண்டியார்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி, அங்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும்.திருபுவனை தொகுதியை சேர்ந்த ஆண்டியார் பாளையம் கிராமத்தின் மைய பகுதியில் பழமை வாய்ந்த குடிநீர்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த நீர்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்களை

திருபுவனை : ஆண்டியார்பாளையத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி, அங்கு சமுதாய நலக்கூடம் கட்டித்தர வேண்டும்.

திருபுவனை தொகுதியை சேர்ந்த ஆண்டியார் பாளையம் கிராமத்தின் மைய பகுதியில் பழமை வாய்ந்த குடிநீர்தேக்க தொட்டி உள்ளது. பயன்பாடு இல்லாமல் உள்ள இந்த நீர்தேக்க தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கிராமத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு சமுதாய நலக்கூடம் ஏதும் இல்லை. 4 கி.மீ., துாரம் வரை சென்று தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டியுள்ளது.இப்பகுதி மக்களுக்கு சமுதாய நலக்கூடம் அத்தியாவசிய தேவையாக உள்ளது. சமுதாய நலக் கூடம் கட்டித்தர வேண்டும் என, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை கட்டிக் கொடுக்கப்பட வில்லை.எனவே அப்பகுதியில் உள்ள பழமையான நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி, சமுதாய நலக்கூடம் கட்டித்தர அரசு முன் வரவேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X