வீடூர் அணை உபரி நீரை திறந்து விட கொம்யூன் ஆணையர் கடிதம்| Dinamalar

இந்தியா

வீடூர் அணை உபரி நீரை திறந்து விட கொம்யூன் ஆணையர் கடிதம்

Added : நவ 13, 2021
Share
நெட்டப்பாக்கம் : வீடூர் அணையின் உபரி நீரை பாசன வாய்க்கால்களில் திறந்து விட வேண்டுமென, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பிய கடிதம்;விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவாக நேற்று முன்தினம் இரவு முதல் 3 ஆயிரத்து 255 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு கடலில்

நெட்டப்பாக்கம் : வீடூர் அணையின் உபரி நீரை பாசன வாய்க்கால்களில் திறந்து விட வேண்டுமென, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பிய கடிதம்;விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து உபரி நீர் அதிக அளவாக நேற்று முன்தினம் இரவு முதல் 3 ஆயிரத்து 255 கன அடி வீதம் திறந்து விடப்பட்டு கடலில் கலந்து வருகிறது.ஆண்டு தோறும் டிசம்பர் மாதத்தில் பாசனத்திற்காக திறந்து விடப்படும் வீடூர் அணையின் இடது பக்க நீர்ப்பாசன வாய்க்காலில் தற்போது உபரி நீரில் ஒரு பகுதியை திறந்துவிட வேண்டும்.இதனால், பாசன வாய்க்கால் வழியாக இறையூர், தொள்ளமூர்,புதுச்சேரி பகுதிகளான சந்தை புதுகுப்பம், லிங்கா ரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், தமிழக பகுதியான நாராயணபுரம், ஒட்டை, புதுப்பாக்கம் கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பும். இதன் காரணமாக, அக்கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாய பணிகள் சிறப்பாக செயல்பட வழிவகை ஏற்படும்.எனவே, வீடூர் அணையின் பொறுப்பு அதிகாரிகள், நீர்வள ஆதார பிரிவு அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் இதுகுறித்து எடுத்துக்கூறி, வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் காலங்களில், பாசன வாய்க்காலிலும் உபரி நீரை திறந்துவிட்டு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X