இந்தியா

இரட்டை கொலை வழக்கில் சரணடைந்த இருவரிடம் வெடிகுண்டு, கத்தி பறிமுதல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி : இரட்டை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.புதுச்சேரி வாணரப்பேட்டை அடுத்த தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவுடி ரவி (எ) பாம் ரவி, 33; இவரது ஆதரவாளர் அந்தோணி பரிடா ஸ்டீபன், 28; இருவரும் கடந்த 24ம் தேதி, வாணரப்பேட்டை ஆலன் வீதியில் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை

புதுச்சேரி : இரட்டை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரிடம் நாட்டு வெடிகுண்டு மற்றும் 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி வாணரப்பேட்டை அடுத்த தாவீதுபேட் நகராட்சி குடியிருப்பைச் சேர்ந்தவர் ரவுடி ரவி (எ) பாம் ரவி, 33; இவரது ஆதரவாளர் அந்தோணி பரிடா ஸ்டீபன், 28; இருவரும் கடந்த 24ம் தேதி, வாணரப்பேட்டை ஆலன் வீதியில் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டனர்.முதலியார்பேட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, அரவிந்தன், பிரகாஷ், ராஜேஷ், சந்துரு, நவீன், ரமணி, மோகன், மாணிக்கவேல், சூர்யா ஆகிய 9 பேரை கைது செய்தனர். வாணரப்பேட்டை அருண், 23; ரெட்டிச்சாவடி பிரவீன், 22. ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.அருண் மற்றும் பிரவீனை கடந்த 3 நாட்களுக்கு முன்பு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், சிறையில் உள்ள ரவுடி வினோத், தீன் உத்தரவுப்படி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி தியாகு தலைமையிலான கூலிப்படையினர் கொலை செய்ததும், கூலிப்படையினருக்கு பிரவீன், அருண் இருவரும் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்ததும் தெரியவந்தது.கொலைக்கு பயன்படுத்தியது போக மீதியுள்ள ஒரு நாட்டு வெடிகுண்டு, நெட்டபாக்கம் ஏரிக்கரையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரின் வாக்குமூலத்தின்படி, ஒரு நாட்டு வெடிகுண்டு, 2 கத்திகள், 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.போலீசார் விசாரணை முடிந்து, இருவரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X