அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொல்லப்படும் மீனவரை, தமிழக மீனவர் என குறிப்பிடுகின்றன. அதனால் தான், இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் போகிறதோ ?

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராட்டிய மீனவர் மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்?நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:மராட்டிய மீனவர், இந்திய மீனவர் என குறிப்பிடப்படுகிறார். ஆனால், தமிழக கட்சிகள், கொல்லப்படும் மீனவரை, தமிழக மீனவர் என

பாகிஸ்தான் கடற்படையினரால் கொல்லப்பட்ட மராட்டிய மீனவர் மரணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கை கடற்படையினரால் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்படாததேன்?



latest tamil news


நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:


மராட்டிய மீனவர், இந்திய மீனவர் என குறிப்பிடப்படுகிறார். ஆனால், தமிழக கட்சிகள், கொல்லப்படும் மீனவரை, தமிழக மீனவர் என குறிப்பிடுகின்றன. அதனால் தான், இந்த பிரச்னை தீர்க்கப்படாமல் போகிறதோ என்னவோ?



எங்கள் அரசு, குதிரை வேகத்தில் சென்றது. அடுத்து வந்துள்ள, தி.மு.க., அரசு, ஆமை, நத்தை வேகத்தில் செல்கிறது. பழையபடி, குதிரை வேகத்தில் செயல்பட்டால் தான், சென்னையை காப்பாற்ற முடியும். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:


பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., அரசு ஆமை போல இருந்ததால் தான், சென்னையில் மழை நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனரே, தி.மு.க.,வினர்...


2015 பெரு வெள்ளத்துக்கு பிறகும் சென்னையை காப்பாற்ற, அ.தி.மு.க., ஆட்சி ஏதும் செய்யவில்லை. கடந்த நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த பழனிசாமிக்கு, ஆறு மாதமே ஆட்சியில் இருக்கும் ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்க அருகதை இல்லை. தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:


'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், எல்லா கோளாறுகளையும் சரி செய்து விடுவோம்' என்றாரே ஸ்டாலின்... தி.மு.க., ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆன பிறகும், இந்த சின்ன விஷயத்தை சரி செய்ய முடியலையா?


வெள்ள நீர் கால்வாய்களை துார் எடுப்பது, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடக்கும். ஆனால், இன்னும் கால் பங்கு கூட பணி முடியவில்லை. அதனால் தான் முதல்வரின் சொந்த கொளத்துார் தொகுதியில் படகில் சென்று, நிலைமையை மக்களுக்கு காண்பித்தேன். தமிழக பா.ஜ., தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை:


latest tamil news



அவர்கள், சொல்வதைத் தான் செய்வர்; செய்வதைத் தான் சொல்வர். அதனால் தான் வௌ்ள நீர் கால்வாய்களை துார்வாராமல் இருந்திருக்கலாம்!



இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், தி.மு.க., குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொழில் செய்வதால், அந்த மாநில அரசுகளின் தயவு தேவைப்படுகிறது. இதனால், தமிழர்களின் உரிமையை, தி.மு.க., அரசு விட்டுக் கொடுக்கிறது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு:


தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, தமிழகத்தில் இருக்கிறது என்பதை, இப்படித் தானே உறுதிபடுத்த முடியும் அவர்களால்...

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202116:11:44 IST Report Abuse
r.sundaram டெண்டர் விடுவது, கமிசன் பார்ப்பது அதோடு அதிகாரிகள் அரசியல்வாதிகள் வேலை முடிந்து விடுகிறது. வேலை நடக்கிறதா என்பதை யாரும் பார்ப்பதும் இல்லை, அந்த வேலை தரமானதாக இருக்கிறதா என்று பரிசீலனை செய்வதும் இல்லை. ஆதலால் குளத்திலுமுள்ள செடிகொடிகளை மேம்போக்காக வெட்டி விட்டு தூர் வாரியதாக கணக்கு காண்பிப்பார்கள். உண்மையில் குளத்தில் சேரும் வண்டல் மண்ணை அகற்றுவது இல்லை. இதே நிலைதான் ஆறுகளும் வாய்க்கால்களும். பின் மழை நீர் எங்கு செல்லும், எங்கு தேங்கும்?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202116:06:13 IST Report Abuse
r.sundaram கணுக்கால் அளவு நீரில் படகை செலுத்தினால் படகு தரை தட்டும், நீரில் படகு மிதக்க முடியாது. அறிவு களஞ்சியம்.
Rate this:
Cancel
செந்தமிழ் அரசு திரு. அண்ணாமலை அவர்கள் கணுக்கால் அளவிலான தண்ணீரில் படகில் சென்றதை எல்லோரும் தான் பார்த்தோமே.
Rate this:
P Ravindran - Chennai,இந்தியா
13-நவ-202118:50:28 IST Report Abuse
P Ravindranஉங்கள் பஞ்சாயத்து தலைவர் வீடுகளில் கயிறு கட்டி மக்கள் வெளியில் வராமல் பார்த்துக்கொண்டு சீன் போட்டார்....
Rate this:
13-நவ-202118:52:07 IST Report Abuse
SUBBU, MADURAIமுதலில் அவர் நடந்துதான் சென்றார்.பிறகு அங்குள்ளவர்கள் இந்த இடத்தில் கணுக்கால் அளவுதான் தண்ணீர் இருக்கிறது,போக போக அந்தப் பக்கமெல்லாம் இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது ஆகையால் படகில் செல்வதே சரி என்று சொன்ன பின்புதான் அவர் படகில் ஏறினார்.குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் சன் நியூஸையும்,கலைஞர் நியூஸையம் பார்த்து மட்டும் கருத்து போடாதே....
Rate this:
P Ravindran - Chennai,இந்தியா
13-நவ-202118:53:42 IST Report Abuse
P Ravindranகூவத்தில் முதலை என்று கூறி சுருட்டிய கட்சிதான். விங்ஞான கொள்ளை, மிஸ்டர் ரோல் ஊழல், சர்க்கரை ஊழல், சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்குப்பையை கரையான் தின்றது, மேலும் பல,...
Rate this:
Soumya - Trichy,இந்தியா
14-நவ-202102:44:00 IST Report Abuse
Soumyaஉன் டலீவன் ரெயின்கோட் தலை நனையாம இருக்க தொப்பி எதுக்கு ஹீஹீஹீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X