பொது செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட்' ஆக்கிரமிப்பு; குறைந்தது குளங்களின் பரப்பு: மூன்று ஆண்டுகளில் மாயமானது 20 ஏக்கர்!

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
கோவையில் குளங்களில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால், 20 ஏக்கர் அளவுக்கு நீர் நிற்கும் பரப்பு குறைந்துள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது நொய்யல் குளங்களில், எட்டு குளங்களில் மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. குளங்களை பொலிவுபடுத்தும் பெயரில், குளத்துக்குள் ரோடு போடுவது,
ஆக்கிரமிப்பு,  குளங்களின் பரப்பு, மாயமானது 20 ஏக்கர்!

கோவையில் குளங்களில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளால், 20 ஏக்கர் அளவுக்கு நீர் நிற்கும் பரப்பு குறைந்துள்ளதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது நொய்யல் குளங்களில், எட்டு குளங்களில் மாநகராட்சி சார்பில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. குளங்களை பொலிவுபடுத்தும் பெயரில், குளத்துக்குள் ரோடு போடுவது, கான்கிரீட் தளங்கள் அமைப்பது என கட்டுமானப் பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின்போது இந்த பணிகள் திட்டமிடப்பட்டன.


நம்பிக்கை தரும் முதல்வரின் அறிவிப்புதற்போது 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளில் நடந்துள்ள ஊழல்கள் தொடர்பாக விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.கோவையில் குளங்களில் நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் பற்றி, ஏற்கனவே ஏராளமான புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விசாரணை அறிவிப்பு, கோவையிலுள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன், இந்த குளங்களில் நீர் நிற்கும் பரப்பைக் குறைத்து நடந்து வரும் பணிகளையும் நிறுத்தி, அந்த இடங்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கையும் அரசிடம் முன் வைக்கப்பட்டுள்ளது.


அறிவியல்பூர்வ ஆய்வறிக்கைதமிழக முதல்வரிடம் கோவையைச் சேர்ந்த, 11 அமைப்புகள் சார்பில் தரப்பட்டுள்ள மனுவில், இதுதொடர்பான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.அதில், இந்த குளங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில், நீர் நிற்கும் பரப்பு எவ்வளவு குறைந்துள்ளது என்பது பற்றி, அறிவியல்பூர்வமாக எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, வாலாங்குளம், செல்வம்பதி குளம், முத்தண்ணன்குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய குளங்களில் மட்டும் 20 ஏக்கர் பரப்பளவில், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளுக்காக 20 ஏக்கர் பரப்பளவை அரசே ஆக்கிரமித்துள்ளதாகதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.


இந்த அரசாவது திருத்துமாநீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற ஐகோர்ட் உத்தரவின்படியே, இந்த குளக்கரைகளில் இருந்த பல ஆயிரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
அவ்வாறு மீட்கப்பட்ட இடங்களை, நீர் நிற்கும் பரப்பாக மாற்றியிருக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் மக்களின் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு, அரசே அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது. முந்தைய அரசு செய்த தவறு, இந்த அரசால் திருத்தப்படுமென்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் கோவை மக்கள்.


latest tamil news

ரத்தமும் தக்காளி சட்னியும்!


வடிவேலு காமெடியில், 'உனக்கு வந்தால் ரத்தம்' எனக்கு வந்தால் தக்காளி சட்னி' என்பதைப் போல, 'மக்கள் செய்தால் ஆக்கிரமிப்பு; அதையே அரசு செய்தால் 'ஸ்மார்ட் சிட்டியா' என்று மக்கள் கிண்டலடிக்கின்றனர்.தற்போது வாலாங்குளத்தின் உபரிநீர் ரோட்டில் ஆறாக ஓடும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டதற்கும், 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளுக்காகக் குறைக்கப்பட்ட பரப்பே காரணமென்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


செல்வ சிந்தாமணி குளம்செல்வசிந்தாமணி குளத்தின் மொத்த நீர்ப்பரப்பு, 36.81 ஏக்கர் ஆக இருந்தது. பல்வேறு ஆக்கிரமிப்புகளின் காரணமாக, 2018 ல் 29.2 ஏக்கர் ஆகக்குறைந்திருந்த இந்த பரப்பு, 26.61 ஏக்கர் அளவுக்கு மேலும் குறைந்துள்ளது. இதில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் மட்டும் 2.59 ஏக்கர் பரப்பளவில் நடக்கின்றன. மொத்தத்தில் இக்குளத்தில் 10.2 ஏக்கர் அளவுக்கு நீர் நிற்கும் பரப்பு குறைந்துள்ளது


.குறிச்சி குளம்குறிச்சி குளத்தின் மொத்தப்பரப்பு, 334.08 ஏக்கராக இருந்தது. 2019ல் நடத்தப்பட்ட ஆய்வின்போது, 304.08 ஏக்கர் ஆக இருந்த நீர் நிற்கும் பரப்பு, தற்பாது 299.19 ஏக்கராகக் குறைந்துள்ளது. இந்த குளத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
மொத்தத்தில் குறிச்சி குளத்தில் 34.89 ஏக்கர் அளவுக்கு, நீர் நிற்கும் பரப்பு குறைந்துள்ளது.


உக்கடம் பெரியகுளம்உக்கடம் பெரியகுளத்தில் 2018ம் ஆண்டில், 321.32 ஏக்கர் பரப்பளவில் நீர் நின்றது. தற்போது குளம் நிரம்பியுள்ள நிலையிலும், 312.37 ஏக்கர் பரப்பளவில்தான் தண்ணீர் நிற்கிறது. இந்த குளத்தில்தான் அதிகபட்சமாக 8.95 ஏக்கர் பரப்பளவுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' பணிகள் நடந்து வருகின்றன. இதேபோன்று, கிருஷ்ணாம்பதி குளத்திலும் 5 ஆண்டுகளில் நீர் நிற்கும் பரப்பு 2.9 ஏக்கர் குறைந்துள்ளது.


மூன்று குளங்களில் 39 ஏக்கர்!கோவையில் நொய்யல் குளங்களை மேம்படுத்துவது தொடர்பாக, நீர்வள ஆதார ஆலோசகர் திருநாவுக்கரசு அளித்த தொழில்நுட்ப அறிக்கையும் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், செல்வம்பதி குளத்தில் 7.64 ஏக்கர், குமாரசாமி குளத்தில் (முத்தண்ணன் குளம்) 18.5 ஏக்கர், வாலாங்குளத்தில் 13 ஏக்கர் என இந்த மூன்று குளங்களில் மட்டும் 39.14 ஏக்கர் பரப்பளவுக்கு, நீர் நிற்கும் பரப்பை அதிகரிக்கச் சாத்தியமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இலங்கை
13-நவ-202119:52:21 IST Report Abuse
jagan லயோலா கல்லூரியும் நுங்கம்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது. ஒரு அம்மன் கோவில் குளமும் அதில் அடக்கம், அதை மண் கொண்டு நிரப்பி விட்டார்கள். ஆலந்தூர் நிதி பள்ளி கூட, ரயில் ட்ராக் கிட்ட உள்ள பொன்னியம்மன் கோவில் குளத்தை மண் கொண்டு நிரப்பி, காம்பவுண்ட் போட்டுவிட்டார்கள். ஸ்வாகா
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202119:18:11 IST Report Abuse
ram இந்த அழிவுக்கு முக்கிய காரணமே இந்த ஊழல் அரசியல் தான். ஊழல் அரசியல் வாதிங்க மற்றும் இந்த கைநீட்டும் அரசு அதிகாரிங்களோட ஒட்டுமொத்த சொத்துக்களையெல்லாம் அரசுடமையாக்கி அலங்களை கோமனத்தோட நடுரோட்டுலே விடனும். அப்போதுதான் இந்த நாடு நல்லா இருக்கும். இந்த அப்பாவி மக்களோட கண்ணீர் இவங்களை சும்மா விடாது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
13-நவ-202115:36:59 IST Report Abuse
r.sundaram குளங்களை நிரப்புவதை தவிர இந்த கழகங்களுக்கு வேறு நல்ல விஷயங்கள் ஒன்றும் செய்ய தெரியாது. திருநெல்வேலியில் புது பஸ் நிலையம் வேய்ந்தான் குளம் பஸ் நிலையம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. குளத்தை நிரப்புவது, அதனால் தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி நிலங்கள் தரிசாக மாறுவது, அதை மூன்று ஆண்டுகள் ஆனவுடன் பிளாட் போட்டு விற்க ஏற்படு செய்ய வேண்டியது. இதுதான் தொடர்ச்சியாக நடக்கும் தொழில். இவர்களை திருத்தவே முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X