28. விடைபெற்றார் சித்தரஞ்சன் தாஸ்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மாண்டலே சிறை மிகவும் கொடுமையாக இருந்தது. அங்கு நேதாஜியை அந்த சிறை படுத்தி எடுத்தது. கடுமையான இருமல், விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தது. கடும் வெப்பம் நிறைந்த அறைகளைக் கொண்டது மாண்டலே சிறை. அங்கு கொடுக்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையில் இருந்தது. நேதாஜி சிறை சென்றதால் காங்கிரஸ் கட்சியும் சுயராஜ்ய கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கின. இதைக் கேள்விப்பட்ட நேதாஜி
28. விடைபெற்றார் சித்தரஞ்சன் தாஸ்

மாண்டலே சிறை மிகவும் கொடுமையாக இருந்தது. அங்கு நேதாஜியை அந்த சிறை படுத்தி எடுத்தது. கடுமையான இருமல், விட்டு விட்டுக் காய்ச்சல் வந்தது. கடும் வெப்பம் நிறைந்த அறைகளைக் கொண்டது மாண்டலே சிறை.
அங்கு கொடுக்கப்படும் உணவு சுகாதாரமற்ற முறையில் இருந்தது. நேதாஜி சிறை சென்றதால் காங்கிரஸ் கட்சியும் சுயராஜ்ய கட்சியும் ஒன்றிணைந்து செயல்பட தொடங்கின. இதைக் கேள்விப்பட்ட நேதாஜி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.



இந்த சமயத்தில் 1925ஆம் ஆண்டு வங்காள சட்டசபையில் மக்கள் நலனுக்கு எதிராக சட்டமன்றத்தில் ஆங்கில அரசு ஒரு தீர்மானம் கொண்டு வந்தது. மசோதாவை முறியடிப்பதற்காக மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் வீட்டில் இருந்து வந்து விவாதத்தில் கலந்து கொண்டார் சித்தரஞ்சன் தாஸ்.



ஆனால் இந்த போராட்டம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. இந்த நிலைமையில் உடல் ரீதியாக முற்றிலும் கலங்கிப் போயிருந்த நேதாஜிக்கு மேலும் ஒரு அடி விழுந்தது. 1925ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி சித்தரஞ்சன் தாஸ் காலமானார். நேதாஜிக்கு தன் கால்களுக்கு கீழே இருந்த பூமி திடீரென்று நழுவியது போல இருந்தது. இடிந்துபோய் உட்கார்ந்து விட்டார். தனது பெற்றோர்களை விட, காந்தியை விட, நேதாஜி அதிகம் நேசித்தது சித்தரஞ்சன் தாஸ் அவர்களைத்தான். அவர் இனி இல்லை என்ற நினைப்பு நேதாஜியை உலுக்கியது.
என்ன செய்யப்போகிறோம் என்று கலங்கினார்.


(எழுத்துருவாக்கம்: ஆதலையூர் சூரியகுமார், மாநிலச் செயலாளர், தேசிய சிந்தனைக் கழகம், தஞ்சாவூர்.)

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X