சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷவாயு தாக்கி மருமகன் மாமனார் பலி

Added : நவ 13, 2021
Share
Advertisement
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த அவளூர் கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி(-52) விவசாயி. இவரது மருமகன் சுபாஷ்-(24). சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சித்தஞ்சி கிராமம் சிவா-28 என்பவருக்கு சொந்தமான நிலத்தை விவசாயியான மணி குத்தகை எடுத்து அறுவடை செய்து வந்துள்ளார் இதன் காரணமாக சுமார்10 நாட்களாக தொடர் மழை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த அவளூர் கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி(-52) விவசாயி. இவரது மருமகன் சுபாஷ்-(24). சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சித்தஞ்சி கிராமம் சிவா-28 என்பவருக்கு சொந்தமான நிலத்தை விவசாயியான மணி குத்தகை எடுத்து அறுவடை செய்து வந்துள்ளார்
இதன் காரணமாக சுமார்10 நாட்களாக தொடர் மழை பெய்த காரணமாக விவசாயி மணி என்பவர் கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததை தொடர்ந்து நேற்று மாலை சுமார் 1 மணி அளவில் வீட்டிலிருந்து சாப்பிட்டு நிலத்திற்கு அவரும் அவரது மருமகன் புறப்பட்டுள்ளனர்.

மேலும் நிலத்திலுள்ள கிணற்றில் இரண்டு பேரும் இறங்கி மின் மோட்டார் மூலம் நிலத்தில் தண்ணீர் பார்ப்பதற்காக முயற்சித்துள்ளனர்.
ஆனால் கிணற்றில் இருந்த தண்ணீர் மூலம் விஷவாயு தாக்கி இரண்டு பேரும் கிணற்றில் மயங்கி விழுந்து உள்ளனர்.நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில் இரவு 10,00 மணி அளவில் அவரது விவசாய நிலத்திலுள்ள கிணற்றில் இரண்டு பேரும் மூழ்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர்
.

அதன் பேரில் மணியின் உறவினர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் சுமார் ஆறு மணி நேரமாக தேடி வந்துள்ளனர்
அப்போது இருவரும் கிணற்று அடியில் சடலமாக இருப்பதை கண்டறிந்து தீயணைப்பு வீரர்கள் இருவரின் உடலையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர் .

இதுதொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த அவளூர் போலீசார் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X