சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ 2.26 கோடி பறிமுதல் : பெண் அதிகாரிக்கு நோட்டீஸ்

Added : நவ 13, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலுார்: 2. 26 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு வேலுார் பெண் அதிகாரிக்கு, பொதுப்பணித்துறை ஆணையரக அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்தவர் ேஷாபனா, 57. இவர் வேலுார் கோட்டம் பொதுப்பணித்துறை தொழில் நுட்ப கல்வி துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.இவரது அலுவலகம் வேலுார் தொரப்பாடியில், தந்தை பெரியார்
ரூ 2.26 கோடி பறிமுதல் : பெண் அதிகாரிக்கு நோட்டீஸ்


வேலுார்: 2. 26 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு வேலுார் பெண் அதிகாரிக்கு, பொதுப்பணித்துறை ஆணையரக அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை சேர்ந்தவர் ேஷாபனா, 57. இவர் வேலுார் கோட்டம் பொதுப்பணித்துறை தொழில் நுட்ப கல்வி துறையில் செயற்பொறியாளராக பணியாற்றி வந்தார்.இவரது அலுவலகம் வேலுார் தொரப்பாடியில், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் உள்ளது. இவர் ஒப்பந்ததாரர்களிடம் அளவுக்கதிமாக லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது.இதையடுத்து வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2, 3 ம் தேதி அவரது அலுவலகம், ஒசூரில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி கணக்கில் வராத 2. 26 கோடி ரூபாய் மற்றும் 14 சொத்து பத்திரங்கள், 28 லட்சம் ரூபாய்க்கான வங்கி டெபாசிட் பத்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், வேலுார் கோட்டத்தை சேர்ந்த ஒன்பது மாவட்டங்களில் நடந்த கட்டட பணிகளை எடுத்து செய்த ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து ேஷாபனா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது 11 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து,கணக்கில் வராத 2. 26 கோடி ரூபாயை வைத்திருந்ததற்கு விளக்கம் கேட்டு பொதுப்பணித்துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து ேஷபனாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு கணக்கு விவரங்களோடு பதில் அளிக்காவிட்டால், அவர் சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா, பெங்களூர் துறை ரீதியான நடவடிக்கை என்றால் அந்த பணத்தில் பங்கு வாங்கி கொண்டு அவருக்கு பதவி உயர்வு அளிப்பது தான். கமிஷன் தானே திராவிடம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X