பொது செய்தி

தமிழ்நாடு

விளைநிலங்கள் பரப்பு அதிகரிக்கப்படும் கலெக்டர் தகவல்

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருப்பத்துார்: விளைநிலங்களின் பரப்பு அதிகரிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து பேசியதாவது:திருப்பத்துார் மாவட்டத்தில், 7 ஆயிரம் ஏக்கர் உள்ள விளைநிலங்கள் 8 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும். இதனால் உற்பத்தி



திருப்பத்துார்: விளைநிலங்களின் பரப்பு அதிகரிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசினார்.திருப்பத்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை வகித்து பேசியதாவது:திருப்பத்துார் மாவட்டத்தில், 7 ஆயிரம் ஏக்கர் உள்ள விளைநிலங்கள் 8 ஆயிரமாக விரிவுபடுத்தப்படும். இதனால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்.மாவட்டத்தில் 334 ஏரிகள், 269 குளங்கள் உள்ளன. இதில் தொடர் மழையில், தண்ணீர் செல்லாத ஏரி, குளங்களை கண்டறிந்து நீபர் வழிப்பாதையில் உள்ள ஆக்கமரிப்புக்கள் அகற்றப்படும். அங்கு வசிப்பவர்களுக்கு பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் வீடுகள் இலவசமாக வழங்கப்படும். உழவர் சந்தைகள் மூன்று உள்ளது. விவசாயிகள் தெரிவித்தால் மேலும் சில இடங்களில் திறக்கப்படும். 04179 222111, 229008 என்ற தொலைபேசியில் விவசாயிகள் புகார்கள் தெரிவிக்கலாம்.விவசாய கடன், பயிர் கடன் வழங்க சிறப்பு முகாம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பித்தால் ஏழு நாளில் கடன் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். வேமாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், தோட்டக்கலை இணை இயக்குனர் பாத்திமா மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X