மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்; 7 பேர் மரணம்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணம் அடைந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:மணிப்பூர் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சராசந்த்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ஐஇடி வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் ராணுவ

இம்பால்: மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணம் அடைந்தனர். இது குறித்த விவரம் வருமாறு:latest tamil newsமணிப்பூர் அசாம் யூனிட்டை சேர்ந்த ராணுவ அதிகாரி தனது குடும்பத்தினருடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சராசந்த்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் ஐஇடி வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர். இதில் ராணுவ வாகனம் சீர்குலைந்து போனது. கமாண்டிங் ஆபிசர், அவரது மனைவி, 8 வயதான குழந்தை மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 வீரர்கள் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கூடுதல் ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news

ராஜ்நாத் கண்டனம்


மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மணிப்பூரில் சராசந்த்பரில் அசாம் ரைபிள் கான்வாய் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் வேதனை அளிக்கிறது. 5 தைரியமான வீரர்கள் மற்றும் இரண்டு குடும்ப உறுப்பினர்களை நாடு இழந்துள்ளது. அவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளிகள் விரைவில் நீதி முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் ஆங் தேர்தலுக்கு கட்டியங்கூறி விட்டார்கள் வரும் பெப்ருவரி மார்ச்சில் அங்கே தேர்தல் வருதே ராணுவ வீரர்களை பலி கொடுக்கறது முதல் ஹோம சடங்காச்சே
Rate this:
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-202120:38:29 IST Report Abuse
tata sumo this coward terrorist cant face our army directly, indian army must hunt this cowards.rest in peace for our brave hearts.
Rate this:
Cancel
13-நவ-202120:33:40 IST Report Abuse
சம்பத் குமார் 1). இறந்த நமது இராணுவ அதிகாரி அவரது மனைவி அவரது குழந்தை மற்றும் நமது ராணுவ வீரர்கள் அனைவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறோம்.2). காயம் அடைந்த நமது வீரர்கள் குணமடைய இறைவனிடம் வேண்டி கொள்வோம்.3). கோழைத்தனமான செயல் இது.4). குடும்ப உறுப்பினர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவர்களை ஏன் கொல்ல வேண்டும்.5). மனசாட்சி இல்லாத மிருகங்கள்.6). இந்த பூமியில் வாழ தகுதியற்ற கோழைகள்.7). மாநில மற்றும் மத்திய அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு இவர்களை ஒழிக்க வேண்டும்.5). இந்த மனசாட்சி இல்லாத மிருகங்களை கண்டறிந்து அவர்களுக்கு உடனே மேலே செல்வதற்கு உண்டான டிக்கெட் வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் உறுதி எடுக்க வேண்டும். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X