பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீரில் மிதக்கும் கன்னியாகுமரி: பேரிடர் மீட்பு படை விரைவு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததாலும், மண் சரிவு காரணமாகவும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.இதனிடையே,
கன்னியாகுமரி, கனமழை, கிராமங்கள், தண்ணீர்,

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்ததாலும், மண் சரிவு காரணமாகவும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
இதனிடையே, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழு குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர்.


கால்வாய்களில் உடைப்புகன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் கோழிப்போர்விளை 20 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் ஆறுகள், கால்வாய்கள், குளங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய்களில் பராமரிப்பு மற்றும் தூர்வாரம் பணிகள் செய்யாததால் கால்வாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. மாவட்டம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.


வீடுகளுக்குள் தண்ணீர்நாகர்கோவில் அடுத்து திருப்பதிசாரம் ஊராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் அருகில் உள்ள கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளிலும் தண்ணீர் புகுந்து வீட்டை விட்டு வெளியே வராமல் திணறி வருகின்றனர். உணவு, தண்ணீர், மருத்துவ வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். 21 ஆண்டுகளாக இதுபோன்று தொடர்ந்து பெரு வெள்ளம் வரும் போதெல்லாம், இது போன்ற பேரழிவு தான் ஏற்படுவதாக தெரிவித்த இந்த மக்கள் ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வருகிறார்கள் பார்வையிடுகிறார்கள். ஆனால் தண்ணீர் ஊருக்குள் வராமல் இருக்க ஒரு தடுப்புச் சுவர் கட்டி தர பலமுறை கேட்டும் அரசு தரப்பில் செய்யாததே இது போன்ற பாதிப்பு ஏற்பட்டு வருவதாக காலனி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.


latest tamil news
முகாம்களில் மக்கள்நாகர்கோவில் புறநகர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு உள்ள மக்களை பத்திரமாக மீட்டு முகாம்களில் தங்க வைக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் அருகே உள்ள ஊட்டுவாள் மடம் பகுதியில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதில் அமைந்துள்ள பெண் குழந்தைகள் காப்பகத்தில் சிக்கித்தவித்த பத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை தீயணைப்பு படை வீரர்கள் மிதவைக் படகு மூலம் பத்திரமாக மீட்டனர். மேலும் வெள்ளநீர் சூழ்ந்து உள்ள பகுதியிலிருந்து மக்கள் முகாம்களுக்கு வர முடியாமல் இருந்தால், அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 ஐ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆறுகளில் வெள்ளப்பெருக்குகன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை பெருஞ்சாணி சித்தர் 12 உள்ளிட்ட முக்கிய அணைகளில் இருந்து நேற்று இரவு 10 லிருந்து 15 வினாடிக்கு 15 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுவது தற்போது வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குழித்துறை தாமிரபரணி ஆறு பழையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக ஆறுகள் மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள கிராமங்களில் தண்ணீர் பெருகெடுத்தது.


latest tamil news
பழைய ஆற்றில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தால் நாகர்கோவிலை அடுத்துள்ள சுசீந்திரத்தில் வீடுகளும் குடியிருப்புகளும் தண்ணீர் புகுந்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் திணறி வருகின்றனர். அவர்களை தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு குழுவினரும் மிதவை படகில் படகினை கொண்டு சென்று அவர்கள் வீடுகளில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சேர்த்து வருகின்றனர். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மாவட்டம் முழுவதும் தண்ணீர் புகுந்து உள்ள கிராமங்களை சென்று மக்களை மீட்பு பணி செய்து வருகின்றனர். மேலும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.


ரயில்கள் ரத்து


வெள்ளப்பெருக்கு காரணமாக, நாகர்கோவிலை அடுத்த இரணியல் ரயில் நிலையம் செல்லும் தண்டவாளங்களில் தண்ணீர் புகுந்ததால் மங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலும் இன்று காலை நாகர்கோவில் நிறுத்தபட்டு உள்ளது. கன்னியாகுமரிக்கு செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுதால் ரயில் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202104:29:58 IST Report Abuse
J.V. Iyer வோட்டு போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்களும், எம்.பீ.க்களும் எங்கே போனார்கள் என்று மக்கள் தேடவேண்டும். அனுபவி ராஜா அனுபவி.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
14-நவ-202114:08:50 IST Report Abuse
pradeesh parthasarathyமக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் உள்ளனர்.... முகநூல் பக்கம் சென்று பாருங்கள் .......
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
14-நவ-202103:21:38 IST Report Abuse
BASKAR TETCHANA கன்யாகுமரியில் வெள்ளம் காற்று மீட்பு படை விரைவு. பாவம் அவர்கள் எத்தனை நாட்கள் பசி பட்டினியோடு இருந்தார்களோ. அவர்களுக்கும் பிள்ளை குட்டிகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
13-நவ-202121:51:32 IST Report Abuse
Nagercoil Suresh ஆபத்துக்கு தோள் கொடுப்பான் தோளன் ஏன்பார்கள் அதேபோல சென்னையை வந்து தாக்க இருந்த புயலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X