சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமனத்தில் குளறுபடி; மாஜி துப்புரவு ஆய்வாளருக்கு நகராட்சி கமிஷ்னர் நோட்டீஸ்

Added : நவ 13, 2021
Share
Advertisement
காங்கேயம்: காங்கேயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னால் துப்புரவு ஆய்வாளரருக்கு, கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து காங்கேயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னால் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ்க்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளதாவது: காங்கேயம் நகராட்சியில்

காங்கேயம்: காங்கேயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முன்னால் துப்புரவு ஆய்வாளரருக்கு, கமிஷனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து காங்கேயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார், முன்னால் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ்க்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியுள்ளதாவது: காங்கேயம் நகராட்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் பணி நியமனம் செய்யப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அறிவுறுத்தலுக்கிணங்க, காங்கேயம் நகராட்சியில் தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சம்பந்தமாக குறிப்பு கேட்கப்பட்டது, இதுவரை எதுவும் சமர்ப்பிக்கவில்லை. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில், 1.11.2016ம் தேதியன்று 36 தற்காலிக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை பணி அமர்த்திக் கொள்ள ஆணையாளருக்கு அளித்துள்ள குறிப்பில், எந்த அடிப்படை விதிகள், அரசாணை மற்றும் அரசனை சுற்றறிக்கை அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்ற குறிப்பை தெளிவாக குறிப்பிடவில்லை. பொத்தாம் பொதுவாக குறிப்பு வழங்கியது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு, நகராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட செயல்பட்டு இருப்பதாக கருதவேண்டியுள்ளது. எனவே விதிமுறைகளுக்கு மாறாக கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை நியமனம் செய்யப்பட்டதாக கருதுவதால் மூன்று தினங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் 1973 ம் வருடத்திய தமிழ்நாடு பொது சுகாதார பணிகள் கீழ் குற்றச்சாட்டு குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு மேல் நடவடிக்கை தொடரப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X