நமது கனவு இல்ல வடிவமைப்பை நாமே அமைக்கலாம்!

Added : நவ 13, 2021
Share
Advertisement
தங்கள் புதிய கனவு இல்லம் இப்படி தான் அமைய வேண்டும் என்று பல கனவுகளுடன் இருப்பது வழக்கம். லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டுக்கு மிக முக்கியமானது வடிவமைப்புத் திட்டம் தான். திட்ட வரைப்படத்தை பொறியாளர் மூலம் வரைவதற்கு பதிலாக நாமே வரையலாம். அதற்கு 'ஸ்மால் புளூ பிரின்டர்' என்ற இணையதளம் உதவுகிறது. அமெரிக்கா டேவிட் டோல் என்பவர் இந்த இணையதளத்தை
நமது கனவு இல்ல வடிவமைப்பை நாமே அமைக்கலாம்!

தங்கள் புதிய கனவு இல்லம் இப்படி தான் அமைய வேண்டும் என்று பல கனவுகளுடன் இருப்பது வழக்கம். லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டும் வீட்டுக்கு மிக முக்கியமானது வடிவமைப்புத் திட்டம் தான். திட்ட வரைப்படத்தை பொறியாளர் மூலம் வரைவதற்கு பதிலாக நாமே வரையலாம். அதற்கு 'ஸ்மால் புளூ பிரின்டர்' என்ற இணையதளம் உதவுகிறது.

அமெரிக்கா டேவிட் டோல் என்பவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார். இந்த இணையதளம் பயன்படுத்தி திட்ட வரைபடம் வரைவது எளிது. இணையதள முகப்பு பக்கத்தில் டிசைன், ஐசோமெட்ரிக் வியூ, 3டி வாக் துரோ, பிரின்ட் ஆகிய பிரிவுகள் இருக்கும். முதலில், டிசைன் கிளிக் செய்ததும் வரும் பிளான்க் பிளான் அல்லது சாம்பிள் பிளான் என்பதில் ஒன்றை கிளிக் செய்யவும். புளூ பிரின்ட் பிளான் குறித்து தெரியாத நிலையில் சாம்பிள் பிளான் கிளிக் செய்யலாம்.

பிளான் அனுமதி வாங்கலாம்

பின் வலது பக்கம் இருக்கும் ஆட் வால் கிளிக் செய்து எங்கெல்லாம் சுவர் வேண்டுமோ அங்கு சுவரை கொண்டு வரலாம். அறை, வெளி சுவர்கள், போர்டிகோ ஆகியவற்றை இந்த டூலில் அமைக்கலாம். அதேபோல் ஆட் டோர், ஆட் விண்டோ கிளிக் செய்து எங்கு கதவுகள், ஜன்னல்கள் வேண்டுமோ அங்கு அவைகளை எளிதாக பொருத்தலாம்.

டிரான்ஸ்பார்ம் கிளிக் செய்து இதுவரை வடிவமைத்ததை மாற்றலாம், நகர்த்தலாம். இறுதியாக, ஐசோமெட்ரிக் வியூ, 3டி வாக் துரோ ஆகியவற்றில் பிடித்த நிறம் தேர்வு செய்ய வேண்டும். இதை செய்து செய்து முடித்ததும் பிளான் திருப்தி என்றால் பிரின்ட் எடுக்கலாம். இதே இணையத்தில் தோட்டம், தரை பிளான் வரையலாம். இதை பயன்படுத்த அக்கவுண்ட் தேவையில்லை. மென் பொருளும் பதிவிறக்க வேண்டாம். புளூ பிரின்ட் பிளான் குறித்து தெரிந்தவர்கள் பிளான் தயாரித்து அனுமதியும் வாங்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X