சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கறிக்கடை செல்போன் கடையில் திருடியவர் கைது

Added : நவ 13, 2021
Share
Advertisement
காங்கேயம்: காங்கேயத்தில் இருவேறு இடங்களில் பணம், செல்போன்கள் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். காங்கேயம் அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ்,29, காங்கேயம் சென்னிமலைரோடு, நால்ரோடு பகுதியில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி கடையைப் பூட்டிவிட்டு, மறுநாள் காலை திறந்து பார்த்தபோது, மேற்பகுதியில் சீலிங்

காங்கேயம்: காங்கேயத்தில் இருவேறு இடங்களில் பணம், செல்போன்கள் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

காங்கேயம் அருகே உள்ள அரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ்,29, காங்கேயம் சென்னிமலைரோடு, நால்ரோடு பகுதியில் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி கடையைப் பூட்டிவிட்டு, மறுநாள் காலை திறந்து பார்த்தபோது, மேற்பகுதியில் சீலிங் உடைக்கப்பட்டு, ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தன. பழுது பார்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூன்று செல்போன்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.40 ஆயிரம்.

இது தொடர்பாக அவர் அளித்த புகாரின்பேரில், காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதே போல, கீரனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 39, என்பவர், காங்கேயம் நால்ரோடு, கீரனூர் சாலையில் கோழிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி இரவு கடையைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையை திறந்து பார்த்தபோது, மேற்கூரையை பிரித்து ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பரஞ்சேர்வழி பகுதியைச் சேர்ந்த கார்த்தி,27, என்ற இளைஞர், ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்தபோது போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மூன்று செல்போன்கள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X