வீணாகும் மழைநீரை சேமிக்க உதவும் நீர்க்குழிகள்!

Added : நவ 13, 2021
Share
Advertisement
ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது நம் வீட்டு முன் எவ்வளவு மழைநீர் வீணாக போகிறது. அதை நாம் சேமித்தால் தண்ணீர் பஞ்சத்தை போக்கிவிடலாம் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். அப்படி வீணாகும் மழைநீரை சேமிக்க பல்வேறு கட்டமைப்பு முறைகள் உள்ளன.நீர்க்குழிகள் முறைசிறிய தனி வீடுகளில் மொட்டை மாடியில் விழும் மழை நீரை கசிவு நீர்க்குழிகள் முறையின் மூலம் சேமிக்கலாம். வீட்டை சுற்றியுள்ள

ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது நம் வீட்டு முன் எவ்வளவு மழைநீர் வீணாக போகிறது. அதை நாம் சேமித்தால் தண்ணீர் பஞ்சத்தை போக்கிவிடலாம் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். அப்படி வீணாகும் மழைநீரை சேமிக்க பல்வேறு கட்டமைப்பு முறைகள் உள்ளன.

நீர்க்குழிகள் முறை

சிறிய தனி வீடுகளில் மொட்டை மாடியில் விழும் மழை நீரை கசிவு நீர்க்குழிகள் முறையின் மூலம் சேமிக்கலாம். வீட்டை சுற்றியுள்ள திறந்தவெளி பகுதியில் தகுந்த இடைவெளியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம், 1.5 மீ ஆழத்திற்கு குழி தோண்ட வேண்டும். குழிக்குள் உடைந்த செங்கல், கூழாங்கல் கொண்டு நிரப்ப வேண்டும். மணல் அதிகமுள்ள பகுதிக்கு ஏற்ப சுமார் 300 சதுர அடி பரப்பிற்கு ஒரு குழி அமைக்கலாம்.

பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஏற்ப கசிவு நீர்ப்படுகை முறையில் நீளவாட்டத்தில் கசிவு நீர் குழிகளை அமைக்கலாம். 1 மீ முதல் 5 மீ வரை தேவைக்கு ஏற்ப நீளம், அரை மீட்டர் முதல் 1 மீ அகலம் மற்றும் அரை மீட்டர் முதல் 1 மீட்டர் ஆழத்தில் குழி அமைக்கலாம். கசிவு நீர்ப்படுகை மற்றும் கசிவு நீர்க்குழிகளின் கீழே ஆழ்குழாய் அமைத்தும் நீரை விடலாம்.

நீரூட்டல் கிணறு

பெரிய அடுக்குமாடி கட்டடங்கள், தொழிற்கூடங்களில் நீரூட்டல் கிணறு முறையில் மழைநீரை சேமிக்கலாம். இதில் 3 அடி விட்டம், 5 முதல் 10 அடி ஆழத்திற்கு செங்கல், கான்க்ரீட் உறை கொண்டு கிணறு கட்டலாம். கான்க்ரீட் பலகையில் மூடி வைத்து, அடிப்பகுதியில் 1 அடி உயரத்திற்கு உடைந்த செங்கல் நிரப்பலாம். திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் மழை நீர் சேமிக்க வடிகட்டு குழிகள் அமைக்க வேண்டும்.

வடிகட்டும் குழி 2 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி உயரம் என்ற அளவில் அமைத்து, கீழ்பகுதியில் செங்கல், மேல் பகுதியில் மணல் நிரப்ப வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் விடப்படும் மழை நீர் குறைந்த வேகம் செல்வதால் வடிகட்டு தொட்டியில் அதிகம் வரும் போது அதை கசிவு நீர்க்குழி அமைத்து விடலாம். கட்டடம், வீட்டின் பரப்பளவு, நிலப்பகுதி அமைப்புக்கு ஏற்ப தனியாக இணைத்தும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X