பசுமை கட்டுமானம் கட்டமைக்க தொழில்நுட்பம் அறிவது அவசியம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
இன்று பரவலாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டுமான முறை என்பது புதிய தொழில்நுட்பமல்ல. ஏற்கனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கட்டுமான முறை தான். அந்த கட்டுமான முறை குறித்த தொழில்நுட்பத்தை அவசியம் அறிந்து கொண்டால் அதை கட்டமைப்பது எளிது தான். பசுமை கட்டுமான முறையில் வீடு கட்ட பணம் இருந்தால் மட்டும் போதாது. அந்த கட்டுமானம் குறித்த குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு இருக்க

இன்று பரவலாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டுமான முறை என்பது புதிய தொழில்நுட்பமல்ல. ஏற்கனவே நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு கட்டுமான முறை தான். அந்த கட்டுமான முறை குறித்த தொழில்நுட்பத்தை அவசியம் அறிந்து கொண்டால் அதை கட்டமைப்பது எளிது தான்.

பசுமை கட்டுமான முறையில் வீடு கட்ட பணம் இருந்தால் மட்டும் போதாது. அந்த கட்டுமானம் குறித்த குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு இருக்க வேண்டும். கட்டுமான பணியாளர் நம் ஐடியா புரிந்து கொள்ளாமல் நாம் கூறும் கட்டுமான முறையை கட்டமைக்காமல் காரணம் கூறும் போது அதை திருத்த நமக்கு தெரிந்திருக்க வேண்டும். உரிமையாளர், கொத்தனார், பொறியாளர் ஆகிய மூன்று பேரில் ஒருவருக்காவது பசுமை கட்டுமான தொழில்நுட்பமும் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் அதன் முழு பயன்களையும் பெறலாம்.

பசுமைக் கட்டுமான தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களும், கட்டுமான பணியாளளர்களும் குறைவாக தான் உள்ளனர். அப்படி கிடைத்தாலும் சிலர் வழக்கமான முறையில் ஒரு வீடு கட்டினால் எவ்வளவு செலவாகுமோ அதைவிட கூடுதலான செலவு வைத்து விடுவார்கள். பகுதி கட்டுமான பொருட்கள் இந்நிலையில் நாமே அந்த தொழில்நுட்பம் கற்றுக்கொண்டு, உள்ளூர் கட்டுமான பணியாளர்களை கொண்டு அதை கட்டமைப்பது தான் சிறந்த வழி. அந்த தொழில்நுட்பத்தை அவருக்கு நீங்கள் கற்று தர வேண்டும்.

இணையத்தளங்கள் வழி கூட பசுமை தொழில்நுட்பம் குறித்து கற்றுக்கொள்ளலாம். கொஞ்சம் முயற்சி செய்தால் நாமே கட்டுமான பொறியாளராக மாறிவிடலாம். நாம் கட்டும் வீட்டுக்குரிய கட்டுமான பொருட்கள் நம் பகுதியில் கிடைக்கிறதா என தேட வேண்டும். குறிப்பாக கட்டுமான கற்களை தேடலாம். வழக்கம் போல சிமென்ட் பூசி பெயின்ட் அடிப்பதாக இருந்தால் அருகில் கிடைக்கும் தரம் குறைந்த செங்கல் போதும். சிமென்ட் பூசவில்லை என்றால் தரமான கற்கள் அவசியம். அழகு, நேர்த்தி முக்கியமென்றால் ஒயர் கட் செங்கற்கள், எக்ஸ்போஸ்டு கற்கள், இன்டர்லாக் கற்கள் பயன்படுத்தலாம்.

ஆங்கிலேயர் கால கட்டடம்

இதை எல்லாம் செய்ய முடியாது என்றால் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான செங்கல் பயன்படுத்தலாம். இந்திய பசுமை கட்டுமான முன்னோடி லாரி பேக்கரால் கட்டிய பெரும்பாலான கட்டடங்கள் செங்கற்களை கொண்டு கட்டப்பட்டவை தான்.இந்த கல்லை வைத்து கட்டினால் உப்பு காற்று அரிக்கும், மழையில் கரையும், பூசவில்லை என்றால் உறுதியாக நிற்காது என கூறுவர். 100 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் காலத்தில் இம்முறையில் தான் கட்டம் கட்டப்பட்டது. அது இன்றும் நிலைத்து நிற்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X