பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு தேதியை நீட்டிக்க மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை: 'பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிரை பதிவு செய்வதற்கான காலக்கெடு நாளை மறுதினம் முடிகிறது. '26 மாவட்டங்களுக்கான

சென்னை: 'பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிரை பதிவு செய்வதற்கான காலக்கெடு நாளை மறுதினம் முடிகிறது. '26 மாவட்டங்களுக்கான சம்பா நெல் பயிர் காப்பீட்டை சிறப்பு இனமாகக் கருதி, பதிவுக்கான தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதைத் தொடர்ந்து, தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், மத்திய அரசுக்கு 8ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று மத்திய அமைச்சருக்கு, கால நீட்டிப்பு கோரி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:பண்டிகை விடுமுறை, கனமழை, கோவில் நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகள், சிட்டா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் போன்ற காரணங்களால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.எனவே, சம்பா நெல் பயிரிட்டுள்ள 26 மாவட்டங்களில், நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான தேதியை, வரும், 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இது, விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதேநேரம், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய வசதியாக, விடுமுறை நாட்களான இன்றும், நாளையும் பொது சேவை மையங்கள் இயங்கும். பயிர் கடன் பெறும் விவசாயிகளுக்காக, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களும் இன்றும், நாளையும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பா, தாளடி நெல் சாகுபடி சான்றை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X