பொது செய்தி

தமிழ்நாடு

உரிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தல்: முதல்வர் ஸ்டாலின்

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
திருவாரூர்: மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய போதுமான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால்
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

திருவாரூர்: மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய போதுமான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், போர்க்கால அடிப்படையில் நீர்வழித்தடங்கள், கால்வாய்கள் முறையாக தூர்வாரினோம். இதனால், பெரிய அளவில் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. அடையாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டன. சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் கண்காணிக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கம், புழல் ஏரிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வெள்ளத்தடுப்பிற்கு மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

அ.தி.மு.க., ஆட்சியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. இதில், பலர் உயிரிழந்தனர். சென்னை மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். தி.மு.க., ஆட்சியில் முன் அறிவிப்பு இன்றி ஏரிகள் திறக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னர், டெல்டா மாவட்டங்களில் நீர்வழித்தடங்கள் தூர்வாரப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி மழை வெள்ள சேதங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news




தி.மு.க., ஆட்சியில் மழை வெள்ளம் பாதிப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். அதனை அரசியலாக்க விரும்பவில்லை.மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-202106:17:30 IST Report Abuse
ராஜா மத்திய அரசக்குழு ஆய்வு செய்து நிதி கொடுக்கும். ஆனால் அது முழுமையாக மக்களுக்கு சென்று சேர்வது கடினம்.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-நவ-202104:21:22 IST Report Abuse
J.V. Iyer கையால் ஆகாத திமுக அரசுக்கு மத்திய அரசு உதவக்கூடாது.
Rate this:
Cancel
Kabali - Madurai,இந்தியா
14-நவ-202100:36:35 IST Report Abuse
Kabali ஒன்றிய அரசிடம் வலியுறுத்தினோம் என்றல்லவா அறிக்கை இருந்திருக்கு வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X