செய்தி செய்தி

தமிழ்நாடு

'தகவல் சட்டத்தின் கீழ் கூட்டுறவு சங்கங்கள்'

Added : நவ 13, 2021
Share
Advertisement
பல்லடம்: 'கூட்டுறவு சங்கங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் வழங்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 56; கடந்த, 2018ல் பள்ளபாளையம் கூட்டுறவு சங்கத்தில் சில தகவல்கள் கேட்டு, சென்னை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளருக்கு விண்ணப்பித்தார்.திருப்பூர் மண்டல பொது தகவல் அலுவலருக்கு

பல்லடம்: 'கூட்டுறவு சங்கங்களும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் வழங்க வேண்டும்' என, மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சாமளாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 56; கடந்த, 2018ல் பள்ளபாளையம் கூட்டுறவு சங்கத்தில் சில தகவல்கள் கேட்டு, சென்னை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளருக்கு விண்ணப்பித்தார்.திருப்பூர் மண்டல பொது தகவல் அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டும், பதில் வழங்கப்படவில்லை. இரண்டு முறை அவர் மேல் முறையீடு செய்த நிலையில், 'பொது அதிகார அமைப்பின் வரையறைக்குள் வராது என்பதால், தகவல் வழங்க இயலாது' என பதில் வழங்கப்பட்டது.இருப்பினும், செல்வராஜ், ஜூலை மாதம் மீண்டும் மேல்முறையீடு செய்தார்.மாநில தகவல் ஆணையம் வழங்கிய உத்தரவில், 'கூட்டுறவு சங்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வரும் என, சென்னை கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர், கடிதம் வாயிலாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐகோர்ட்டும் உறுதிப்படுத்தி உள்ளது. விண்ணப்பதாரருக்கு, ஏழு தினங்களுக்குள் தகவல் வழங்க திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்க பொது தகவல் அலுவலருக்கு, மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X