நியூயார்க்,: ஐ.நா.,வின் சர்வதேச சட்ட கமிஷனின் உறுப்பினராக, இந்தியாவின் சார்பில் பேராசிரியர் பிமல் படேல், 51, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவிலான சட்ட வரையறைகள் உருவாக்குவது உள்ளிட்டவற்றுக்காக 1947ல் அமைக்கப்பட்டது சர்வதேச சட்டக் கமிஷன்.ஐ.நா.,வின் ஒரு அமைப்பான இதில், 34 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் எட்டு இடங்களுக்கு, 11 நாடுகள் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்தத் தேர்தலில் 192 உறுப்பினர்களில், 163 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் சார்பில் பேராசிரியர் பிமல் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்துக்கு 162 ஓட்டுகள், ஜப்பானுக்கு 154, வியட்நாமுக்கு 145, சீனாவுக்கு 142 ஓட்டுகள் கிடைத்தன.வரும் 2023 ஜன., 1 முதல், ஐந்து ஆண்டுகளுக்கு சர்வதேச சட்டக் கமிஷன் உறுப்பினராக, பேராசிரியர் பிமல் படேல் இருப்பார். ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலை துணை வேந்தராகவும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராகவும் அவர் உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE