கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கணவரை ஆஜர்படுத்த வழக்கு: மனைவிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
மதுரை:எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் கணவரை ஆஜர்படுத்த தவறான விபரங்களுடன் ஆட்கொணர்வு மனு செய்த மனைவிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளத்தை சேர்ந்த பேபி ஷாலினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:என் கணவர் துரைசிங். ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் -

மதுரை:எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் கணவரை ஆஜர்படுத்த தவறான விபரங்களுடன் ஆட்கொணர்வு மனு செய்த மனைவிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளத்தை சேர்ந்த பேபி ஷாலினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு:என் கணவர் துரைசிங். ராஜஸ்தான் மாநிலம், பார்மர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் - பி.எஸ்.எப்., படையில் ஹவில்தாராக பணிபுரிகிறார். அவர் தன்னை சந்திக்கத் தவறினார். தற்போது அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. அவரை ஆஜர்படுத்த கன்னியாகுமரி எஸ்.பி., மற்றும் தெற்கு தாமரைக்குளம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பேபி ஷாலினி மனு செய்தார்.

நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவு:மனுதாரரின் கணவர் துரைசிங் உயிருடன் உள்ளார். அவர் அடிக்கடி மனுதாரரை போனில் தொடர்பு கொண்டு பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது.

ராஜஸ்தானில் ஹவில்தாராக பணியாற்றும் தன் கணவரை தமிழகத்திற்கு வரவழைக்க நிர்ப்பந்திக்கும் வகையில் மனுதாரர் இம்மனுவை தவறான விபரங்களுடன் தாக்கல் செய்துள்ளார்.கற்பனையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். இது சட்ட நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகும். மனுவை தள்ளுபடி செய்கிறோம்.உயர் நீதிமன்ற சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு மனுதாரர் 15 ஆயிரம் ரூபாயை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X