பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் நின்று செல்ல வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் நின்று செல்ல வலியுறுத்தல்

Added : நவ 13, 2021
Share
சென்னை:பாலருவி 'எக்ஸ்பிரஸ்' ரயில் செங்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் பயணியர் நல சங்க செயலர் கிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை ரயில் நிலையம் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உள்ள, பெரிய நிலையமாகும். கேரளா மாநிலம் பாலக்காட்டில்

சென்னை:பாலருவி 'எக்ஸ்பிரஸ்' ரயில் செங்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என, பயணியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் பயணியர் நல சங்க செயலர் கிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதம்:தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை ரயில் நிலையம் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் உள்ள, பெரிய நிலையமாகும்.

கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து, செங்கோட்டை வழியாக, திருநெல்வேலிக்கு இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் நிறுத்தம் ஜனவரி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், செங்கோட்டை மற்றும் அருகில் உள்ள, அச்சன்கோவில், மேக்கரை, புளியரை, பிரானுார் பார்டர், வல்லம், இலஞ்சி ஏரியா மக்கள், செங்கோட்டை நிலையத்தில் இருந்து முன்பதிவு செய்தாலும், தென்காசியில் இருந்து, புறப்படுவது போல் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்நிலையம் வணிக நிறுத்தமாக அறிவிக்கப்பட வேண்டும். பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட் முன்பதிவில், செங்கோட்டை பெயர் இடம்பெற வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X