நீலகிரியில் நிலச்சரிவு அபாயம் உஷார் நிலையில் அரசு துறைகள்

Added : நவ 13, 2021
Advertisement
குன்னுார்:நீலகிரியில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தால், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. மழை தீவிரமடையும் பட்சத்தில், குன்னுார், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டத்தில், 253

குன்னுார்:நீலகிரியில் பேரிடரை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்தால், நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக, மாநில பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. மழை தீவிரமடையும் பட்சத்தில், குன்னுார், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மாவட்டத்தில், 253 இடங்கள் பேரிடர் அபாயம் உள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. குன்னுார் - பர்லியார் சாலையில், 24 மணிநேர கண்காணிப்பு நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி கூறுகையில்,''நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டால் உடனடியாக அகற்ற, 64 அகழ் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. ''குன்னுார் - பர்லியார் இடையே, எட்டு அபாய மரங்களை உடனடியாக வெட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். அவசர தேவைக்கு, மக்கள், 1,077 என்ற எண்ணில் அழைக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X