பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு 10 நாட்களில் 15.5 டி.எம்.சி., காவிரி நீர்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், தமிழகத்திற்கு 10 நாட்களில், 15.5 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்துள்ளது.தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி கர்நாடகா நீரை திறப்பது கிடையாது.நிலுவைஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக 7.69;

சென்னை:நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், தமிழகத்திற்கு 10 நாட்களில், 15.5 டி.எம்.சி., காவிரி நீர் கிடைத்துள்ளது.

தமிழகத்திற்கு ஆண்டு தோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. முறைப்படி கர்நாடகா நீரை திறப்பது கிடையாது.நிலுவைஜூன் மாதம் 9.19 டி.எம்.சி.,க்கு பதிலாக 7.69; ஜூலையில் 31.2 டி.எம்.சி.,க்கு பதிலாக 27.9; ஆகஸ்டில் 45.9 டி.எம்.சி.,க்கு பதிலாக 22.6; செப்டம்பரில் 36.7 டி.எம்.சி.,க்கு பதிலாக 33.1 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்தது.

இதனால், அக்டோபர் மாத துவக்கத்தில், 30 டி.எம்.சி., நீரை கர்நாடகா நிலுவை வைத்திருந்தது. தமிழகம் தரப்பில், இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் முறையிடப்பட்டது.இந்நிலையில், கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கியது. தமிழக எல்லையை ஒட்டியுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதி களிலும் மழை கொட்டியதால், 20.2 டி.எம்.சி.,க்கு பதிலாக அக்டோபரில் தமிழகத்திற்கு 48.7 டி.எம்.சி., நீர் கிடைத்தது.

இந்த மாதத்தில் 13.7 டி.எம்.சி., கர்நாடகா திறக்க வேண்டும்.கூடுதல் நீர்அங்குள்ள அணைகள் நிரம்பியதால் திறக்கப்பட்ட உபரி நீர்; நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் கிடைத்த நீரும் சேர்த்து, 10ம் தேதி வரை தமிழகத்திற்கு 15.5 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.

இந்த காலக்கட்டத்தில், 4.59 டி.எம்.சி., நீர் தான் வந்திருக்க வேண்டும். மாத ஒதுக்கீட்டை காட்டிலும், கூடுதல் நீர் கிடைத்துள்ளது.எனவே, நடப்பு நீர் வழங்கும் காலத்தில் 7.36 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைத்துள்ளது. அடுத்தாண்டு மே மாதம் வரை இந்த நீர்வழங்கும் காலம் நடைமுறையில் இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X