பொது செய்தி

தமிழ்நாடு

50,000 தல மர கன்று கோவில்களில் நடவு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் தல மரக் கன்று நடும் திட்டத்தின் கீழ் இதுவரை, 2,727 கோவில்களில் 50 ஆயிரத்து 453 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஒரு லட்சம் தல மரக் கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம்,சென்னையில் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள கோவில்களில், அந்தந்த கோவில் தல மரங்களான மா, புன்னை, வில்வம்,

சென்னை:தமிழகத்தில் தல மரக் கன்று நடும் திட்டத்தின் கீழ் இதுவரை, 2,727 கோவில்களில் 50 ஆயிரத்து 453 மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஒரு லட்சம் தல மரக் கன்றுகள் நடும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம்,சென்னையில் துவக்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ள கோவில்களில், அந்தந்த கோவில் தல மரங்களான மா, புன்னை, வில்வம், செண்பகம், மருதம், நாவல், சந்தனம், மகாக்கனி, இலுப்பை கொய்யா, மகிழம் போன்ற மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 2,727 கோவில்களில், இதுவரை 50 ஆயிரத்து 453 தல மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக ஹிந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X