மலை காய்கறி தோட்டத்திற்கு நீரோடையில் தண்ணீர் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலை காய்கறி தோட்டத்திற்கு நீரோடையில் தண்ணீர் திருட்டு

Added : நவ 13, 2021
Share
ஊட்டி:ஊட்டி அருகே நீரோடையை மறித்து, மலை காய்கறி தோட்டங்களுக்கு தண்ணீர் திருடுவதால், எமரால்டு அணையின் நீர் மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் இங்கு சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரால், குந்தா, கெத்தை, பரளி மின் நிலையங்களில் தினசரி, 455
 மலை காய்கறி தோட்டத்திற்கு நீரோடையில் தண்ணீர் திருட்டு

ஊட்டி:ஊட்டி அருகே நீரோடையை மறித்து, மலை காய்கறி தோட்டங்களுக்கு தண்ணீர் திருடுவதால், எமரால்டு அணையின் நீர் மட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், குந்தா மின் வட்டத்துக்கு உட்பட்ட எமரால்டு அணை, 184 அடி கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலை நீரோடைகளில் இருந்து வரும் தண்ணீர் இங்கு சேமிக்கப்படுகிறது. இந்த தண்ணீரால், குந்தா, கெத்தை, பரளி மின் நிலையங்களில் தினசரி, 455 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டில், பரவலாக மழை பெய்தாலும், அணைகளில் எதிர்பார்த்த அளவு தண்ணீர் நிரம்பவில்லை. இதனால், மூன்று மின் நிலையங்களில் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது.

எமரால்டு அணைக்கு வரும் நீரோடை தண்ணீரை மறித்து, மலை காய்கறி தோட்டங்களுக்கு திருட்டு தனமாக தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதனால், தான் அணையில் தண்ணீர் சேகரமாகாமல் மிகவும் குறைந்து வருவதாக, ஆய்வில் தெரிந்தது. மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'குந்தா மின் வட்டத்தில், அப்பர்பவானி, எமரால்டு அணையை நம்பி மின் உற்பத்தி நடந்து வருகிறது.'நீரோடை தண்ணீரை திருடுவதால், அணை நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'தற்போது, இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X