கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலி| Dinamalar

கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலி

Added : நவ 13, 2021 | |
ராணிப்பேட்டை:கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அவளூர் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 52; விவசாயி. இவர் மருமகன் சுபாஷ், 24, சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தன் கிராமத்தில் நெல் அறுவடை பணியை மணி செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக
 கிணற்றில் விஷவாயு தாக்கி  மாமனார், மருமகன் பலி

ராணிப்பேட்டை:கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம், அவளூர் கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி, 52; விவசாயி. இவர் மருமகன் சுபாஷ், 24, சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தன் கிராமத்தில் நெல் அறுவடை பணியை மணி செய்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால், வயலில் உள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது. நீரை வெளியேற்ற மணியும், சுபாஷும் நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு கிணற்றில் இறங்கி, மோட்டாரை இயக்கியுள்ளனர். அப்போது விஷவாயு தாக்கி இருவரும் இறந்தனர்.

காவேரிப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் இரவு 11:00 மணிக்கு இருவரது சடலங்களை மீட்டனர். அவளூர் போலீசார் நடத்திய விசாரணையில், தொடர் மழையால் கிணற்றில் கழிவுநீர் கலந்து விஷவாயுவாக மாறியது தெரிந்தது. இதனால் கிணறு மூடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X