பொது செய்தி

தமிழ்நாடு

கனமழைக்கு இதுவரை 17 பேர் பலி

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை எழிலகத்தில், தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் ஓரளவு மழை குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை மக்கள் தெரிவிக்கின்றனர். அதை உள்ளாட்சிகளுக்கு தெரிவித்து, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது குறித்து,

சென்னை: சென்னை எழிலகத்தில், தமிழக வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுதும் ஓரளவு மழை குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை மக்கள் தெரிவிக்கின்றனர். அதை உள்ளாட்சிகளுக்கு தெரிவித்து, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணைகளில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது குறித்து, பொதுமக்களுக்கு உரிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு, அமைச்சர்கள் குழு சென்றுள்ளது. அக்குழு அறிக்கை அளித்த பிறகு, முதல்வர் பயிர்களுக்கான நஷ்ட ஈடு விபரங்களை அறிவிப்பார். டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு மட்டுமின்றி, மற்ற துறை சேதங்களும் கணக்கெடுக்கப்படும். அதன்பிறகு மத்திய குழுவை அழைப்போம். வடகிழக்கு பருவமழை காரணமாக, 1.69 லட்சம் ஏக்கர் வேளாண் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இதில், 12 ஆயிரத்து 666 ஏக்கர் பயிர்கள், 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்துள்ளன. தோட்டக்கலை பயிர்களில், 9,931 ஏக்கர் நிலங்களில் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதில், 968 ஏக்கர் நிலங்கள், 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்துள்ளன.

நெடுஞ்சாலைத் துறையின், ஐந்து பாலங்கள், 259 சிறு பாலங்கள், 1,013 கி.மீ., சாலைகள் சேதமடைந்துள்ளன. சாலையில், 72 இடங்களில் நிலச்சரிவு, ஒன்பது இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.மழைக்கு 17 பேர் இறந்துள்ளனர்; 64 கால்நடைகள் இறந்துள்ளன. இது தவிர, 534 குடிசைகள், 133 வீடுகள் சேதமடைந்துள்ளன.மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு, மத்திய அரசிடம் இருந்து, 300 கோடி நிலுவை தொகை வர வேண்டி உள்ளது. இதற்கு முன், புயலுக்கு நிவாரண நிதி வழங்கி உள்ளோம்; மழைக்கு வழங்கியதில்லை. இதுபோன்ற சூழ்நிலைக்கு நிதி வழங்குவது குறித்து, முதல்வர் முடிவு செய்வார். இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X