துளிகள் செய்தி

தமிழ்நாடு

உண்மையை காட்டும் ஊமை விழிகள்!

Added : நவ 13, 2021
Share
Advertisement
நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களை கேட்டாலே பயமாக இருக்கிறது. அதற்காக, 24 மணி நேரமும் நாம் கண் விழித்து கண்காணிக்க முடியுமா. உங்கள் கண்கள் துாங்கட்டும்; மூன்றாவது கண்களான 'சிசி டிவி' கேமராக்கள் வந்து விட்டன.உங்கள் வீடு, அலுவலகம், கடையின் பாதுகாப்புக்காக கேமரா பொருத்த போகிறீர்களா? இப்பொழுது குறைந்த பட்ஜெட்டிலும் 'சிசி டிவி' கேமரா பொருத்த முடிகிறது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்களை கேட்டாலே பயமாக இருக்கிறது. அதற்காக, 24 மணி நேரமும் நாம் கண் விழித்து கண்காணிக்க முடியுமா. உங்கள் கண்கள் துாங்கட்டும்; மூன்றாவது கண்களான 'சிசி டிவி' கேமராக்கள் வந்து விட்டன.உங்கள் வீடு, அலுவலகம், கடையின் பாதுகாப்புக்காக கேமரா பொருத்த போகிறீர்களா? இப்பொழுது குறைந்த பட்ஜெட்டிலும் 'சிசி டிவி' கேமரா பொருத்த முடிகிறது. அதனால், நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ!எதை 'கவரேஜ்' செய்யணும்இன்டோர், அவுட்டோர் என எந்த பகுதியை கவரேஜ் செய்ய வேண்டும் என்பதை பொறுத்தே, 'சிசி டிவி' கேமராவை தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக, 2 மெகா பிக்சல் எச்.டி., பிச்சர் குவாலிட்டி கேமரா, வீடு போன்ற இடங்களுக்கு 20 முதல் 25 மீட்டர் எல்லைக்குள் பாதுகாப்பு அளிக்கிறது. ஐந்து முதல் எட்டு எம்.பி., ஹை ரேஞ்ச் கேமராக்கள் அவுட்டோர்களுக்கு சரியாக இருக்கும்.கேமரா வகைகள்அடிப்படையில் இரண்டு வகையான கேமராக்கள் உள்ளன. எச்.டி., கேமராக்கள் வீடு போன்ற அமைப்புகளுக்கும், ஐபி நெட்வொர்க்கிங் கேமராக்கள் தொழிற்சாலை மற்றும் நிறுவன அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஒயர், ஒயர்லஸ், டோம், புல்லட் டைப், சி மவுண்ட் என 'சிசி டிவி' கேமராக்களில் பலவகைகள் உள்ளன. ஆட்டோர டிராக்கிங், மோஷன் டிடெக்சன், ஆடியோ சென்சார் என மேலும் பல அம்சங்களுடனும் விற்கப்படுகின்றன.ஸ்டோரேஜ்தொழில்நுட்ப வளர்ச்சியில், இன்று பல 'சிசி டிவி' கேமராக்கள், இன்பில்ட் எஸ்.டி., கார்டுடன் வருகிறது. இந்த மைக்ரோ எஸ்.டி., கார்டுகளை, 32, 64, 128 ஜி.பி., என பல்வேறு திறன்களில் வாடிக்கையாளர்கள் பொருத்தலாம். இன்டர்னல் ஸ்டோரேஜ் இல்லாமல், பதிவுகளை சேமிக்க டி.வி.ஆர்., ஹாட்டிஸ்க் தேவைப்படும் மலிவான 'சிசி டிவி' கேமராக்களும் சந்தையில் கிடைக்கிறது.வாட்டர் ப்ரூப்மழை போன்ற வெளிப்புற தாக்கங்கள் காட்சிப்பதிவு மற்றும் கேமராவை பாதிக்கும்.
இதையும் கருத்தில் கொண்டு, வெளிப்பகுதியில் வைக்க வாட்டர் ப்ரூப் கேமராக்களை வாங்க வேண்டும். இரவு நேரங்களில் தெளிவாக காட்சிகளை பதிவு செய்ய நைட் விஷன் கொண்ட சிறப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.கேமரா 'ரேஞ்ச்''சிசி டிவி' கேமரா ரேஞ்ச், லென்சின் குவிய நீளம் மற்றும் இமேஜ் சென்சாரின் அளவை அடிப்படையாக கொண்டது. கேமராவின் ரேஞ்ச் அதிகமாக இருப்பின், தொலைவிலிருக்கும் பொருட்களும் தெளிவாக தெரியும். வெளிப்புற கேமராக்களுக்கு, அதிக ரேஞ்சுகள் தேவைப்படும். ஒரு கேமராவுக்கு, குறைந்தபட்சம், 20 முதல், 20 மீட்டர் ரேஞ்ச் இருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X