இந்தியா

'மை மெடிக்கல் ஷாப்' ஆன்லைன் மருந்தகம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

Added : நவ 13, 2021
Share
Advertisement
புதுச்சேரி:'மை மெடிக்கல் ஷாப்' ஆன்லைன் மருந்தகம் மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட செயலியை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் நாராயணசாமி கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர். 'மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன்' மருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜராஜன்
 'மை மெடிக்கல் ஷாப்' ஆன்லைன் மருந்தகம் முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்

புதுச்சேரி:'மை மெடிக்கல் ஷாப்' ஆன்லைன் மருந்தகம் மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட செயலியை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி கல்விக் குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலர் நாராயணசாமி கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர். 'மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன்' மருந்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜராஜன் கூறியதாவது:எஸ்.எம்.வி. ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்டின் ஓர் அங்கமான மை மெடிக்கல் ஷாப் எனும் ஆன்லைன் மருத்துவ சேவையில் தடம் பதிக்க உள்ளது.

365 நாட்களும், 24 மணி நேரமும் வீட்டுக்கே சென்று மருந்து பொருட்களை வினியோகிக்கும் வசதி கொண்டது.சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும், மை மெடிக்கல் ஷாப் ஆன்லைன் மருந்தகத்தில் 1,000க்கும் அதிகமான பிராண்டுகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

26 ஆயிரத்துக்கும் அதிகமான பின்கோடுகளுக்கு டெலிவரி செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கே வந்து ரத்தப் பரிசோதனை மற்றும் இதர பரிசோதனைகள் செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் வாயிலாக மருத்துவ சேவை பெற்றுக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிறந்த மருந்தக சேவையை வழங்கும் முன்னணி மருந்தகங்களில் ஒன்றாக வளர்ச்சி காணும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X