'மேக்கப்' விரும்பும் பெண்களுக்கு, மழைக்காலம் எப்போதும் பெரிய சிக்கல் தான். வெயிலை கூட சமாளித்து விடலாம், மழையில் எப்படி மேக்கப் போட்டாலும் டல்லடித்து விடும். சில சமயங்களில் மேக்கப் அழிந்து, திட்டு திட்டாக மாறி விடும்.
அழகுசாதன கிரீம், ஐ லைனர், பவுண்டேஷன் போன்றவற்றை சருமம் உள்வாங்காது. இதற்கு என்ன செய்ய வேண்டும் என விளக்குகிறார், அழகுநிலைய நிர்வாகி செல்வி.அவர் கூறும் டிப்ஸ்...மழை நேரங்களில் பலர் மாய்ச்சுரைசர் பயன்படுத்துவதை தவிர்த்து விடுகின்றனர். காற்றில் ஈரப்பதம் இருந்தாலும், நம் சருமம் விரைவில் உலர்ந்து விடும். உங்கள் கைவசம் எப்போதும் மாய்ச்சுரைசர் இருக்க வேண்டும். அதேபோல், சன் ஸ்கின் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.இதுபோன்ற நேரங்களில் கிரீம் அடிப்படையிலான மேக்கப் சாதனைகளை தவிர்த்து, பவுடர் மேக்கப் பொருட்களை பயன்படுத்துங்கள். பவுண்டேசன் அல்லது கன்சீலரை உபயோகப்படுத்த வேண்டாம்.
லிப்ஸ்டிக் பொறுத்தவரை, பிங்க், லைட் நிற பிரவுன் மழைக்காலத்துக்கு எடுப்பாக இருக்கும்.கண்களுக்கு வாட்டர் ப்ரூப் ஐ லைனர், மஸ்காரா பயன்படுத்த வேண்டும். இவற்றை பயன்படுத்தும் கண்களை சற்று ஈரப்படுத்தி, அதன் மீது போட்டால் நன்றாக இருக்கும். மேட் லுக் வேண்டுபவர்கள் காஜலை நன்கு கூர்மையாக்கி பயன்படுத்த வேண்டும். மழைக்காலங்களில் மேக்கப் எப்போதும் அளவாகவே இருக்க வேண்டும்.முகத்தை நன்கு கழுவிய பின், ஐஸ்கட்டிகளால், முகத்தில் 10 முதல் 15 நிமிடம் தேய்ப்பதன் மூலம் அதிகமாக வியர்ப்பதை குறைத்து, மேக்கப் கலையாமல் பிரஷ்ஷாக வைக்க உதவும்.மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பு சிக்கலானது. அச்சமயங்களில், இறுக்கமான பேண்டுகள் பயன்படுத்துவது, ப்ரீ ஹேர் விடுவதை தவிர்த்து விடுவது நல்லது. மழைக்காலத்தில் அனைத்து வகையான கிருமிகள், பாக்டீரியா பாதிப்புகள் சருமத்துக்கு ஏற்படும். பூஞ்சை எதிர்ப்பு பவுடர் பயன்படுத்தலாம். இயற்கை முறையில் தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும், ஆன்டி ஆக்சிடன்ட் சருமத்தில் உண்டாகும், பாக்டீரியா பாதிப்புகளை தடுக்கும். குறிப்பாக, தாகம் எடுக்கவில்லை என்றாலும் கட்டாயம் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது சருமத்துக்கு மட்டுமல்ல உடல் மொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE