பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் காப்பீடு தேதி நீட்டிக்க மத்திய அரசுக்கு கடிதம்

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை:'பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிரை பதிவு செய்வதற்கான காலக் கெடு நாளையுடன் முடிகிறது. '26 மாவட்டங்களுக்கான சம்பா

சென்னை:'பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கடைசி தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமருக்கு, தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிரை பதிவு செய்வதற்கான காலக் கெடு நாளையுடன் முடிகிறது. '26 மாவட்டங்களுக்கான சம்பா நெல் பயிர் காப்பீட்டை சிறப்பு இனமாகக் கருதி, பதிவுக்கான தேதியை, 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், மத்திய அரசுக்கு இம்மாதம் 8ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் மத்திய அமைச்சருக்கு, கால நீட்டிப்பு கோரி கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: பண்டிகை விடுமுறை, கன மழை, கோவில் நிலங்களில் பயிர் செய்துள்ள விவசாயிகள், சிட்டா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல் போன்ற காரணங்களால், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சம்பா நெல் பயிரிட்டுள்ள 26 மாவட்டங்களில், நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான தேதியை, வரும், 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். இது, விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X