பொது செய்தி

தமிழ்நாடு

வந்தாச்சு தீபத்திருவிழா

Added : நவ 13, 2021
Share
Advertisement
திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் கண்காட்சி துவங்கியுள்ளது.வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள் என எந்த இடத்திலும் வைக்கக்கூடிய வகையில் பல்வேறு வடிவங்களில் பித்தளை மற்றும் மண் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. காமாட்சி விளக்கு, நந்த தீபம், மலபார் விளக்கு, அஸ்டோத்திர தீபம், லட்சுமி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தொங்கு

திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விளக்குகள் கண்காட்சி துவங்கியுள்ளது.வீடுகள், அலுவலகங்கள், கோவில்கள் என எந்த இடத்திலும் வைக்கக்கூடிய வகையில் பல்வேறு வடிவங்களில் பித்தளை மற்றும் மண் விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. காமாட்சி விளக்கு, நந்த தீபம், மலபார் விளக்கு, அஸ்டோத்திர தீபம், லட்சுமி தீபம், அன்னம் மேஜை விளக்கு, அன்னம் தொங்கு விளக்கு, துாண்டா விளக்கு, தொங்கு விளக்கு, பாலாடை விளக்கு, லட்சுமி தாமரை விளக்கு, அடுக்கு தீபம், குபேர தீபம், கண்ணாடி விளக்கு, பஞ்சலிங்க தீபம், பஞ்சாட்சர தொங்கு விளக்கு, கிளி விளக்கு, அகல் விளக்கு, இரட்டை தகழி விளக்கு, சங்கு சக்கர தொங்கு விளக்கு, அன்னம் சாதா விளக்கு, பூம்புகார் குத்துவிளக்கு ஆகியவை இடம் பெற்றுள்ளன.பல வடிவங்களில் மண் விளக்குகளும் இருக்கின்றன.
கண்ணாடியில் செய்யப்பட்ட அணையாத விளக்கு, எதிரொளிக்கும் விளக்குகளும் இக்கண்காட்சிக்கு புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளன. கஜலட்சுமி விளக்கு, நவக்கிரக தீபம், அஷ்டலட்சுமி தீபம், வாசமாலை விளக்கு, பிரதோஷ விளக்கு, கொடி விளக்கு போன்றவையும் இருக்கின்றன.பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ரோனல்டு செல்வஸ்டின் கூறுகையில், ''வரும், 30 வரை கண்காட்சி நடைபெறும். 10 ரூபாயில் இருந்து மண் விளக்குகள் உள்ளன. பித்தளை விளக்குகள் குறைந்தபட்சம், 40 ரூபாய் முதல் அதிகபட்சம் இரண்டரை லட்சம் ரூபாய் வரையிலான விலையில் இருக்கின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X