பொது செய்தி

தமிழ்நாடு

ஹேப்பி... சில்ட்ரன்ஸ் டே!

Updated : நவ 14, 2021 | Added : நவ 13, 2021
Share
Advertisement
முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளான இன்று நவ., 14ம் தேதி, நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.நம்மூரில் குழந்தைகள் தினம் என்பது பள்ளிகளில் மட்டும் கொண்டாடப்படும் நிகழ்வாக இருக்கிறது. வீடுகளில், குழந்தைகள் தின வாழ்த்து கூறவும் மறந்து விடுகிறோம்.வீட்டிலும் கொண்டாடலாம்குழந்தைகள் தினத்தை வீட்டிலேயே பெற்றோர் நடத்தி, குழந்தைகளின் மகிழ்ச்சியை
 ஹேப்பி... சில்ட்ரன்ஸ் டே!

முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளான இன்று நவ., 14ம் தேதி, நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

நம்மூரில் குழந்தைகள் தினம் என்பது பள்ளிகளில் மட்டும் கொண்டாடப்படும் நிகழ்வாக இருக்கிறது. வீடுகளில், குழந்தைகள் தின வாழ்த்து கூறவும் மறந்து விடுகிறோம்.வீட்டிலும் கொண்டாடலாம்குழந்தைகள் தினத்தை வீட்டிலேயே பெற்றோர் நடத்தி, குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கலாம்.

கொரோனாவுக்குபின், பள்ளி சூழலில் இணைந்திருக்கும் குழந்தைகளுக்கும், வேலைப்பளுவால் களைத்திருக்கும் உங்களுக்கும் உற்சாகமளிக்கும். இன்று, குழந்தைகளுடன் விலைமதிப்பற்ற தருணங்களை செலவிடுங்கள். திரும்ப நீங்கள் பெறும் அன்பின் அளவு அற்புதமானது!


இன்றைய தினத்தைசிறப்பாக்க இதோ வழிl


* குழந்தைகள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் முக்கியத்துவத்தை வீடியோ கதைகள் மூலம் சொல்லிக்கொடுங்கள். இது, அவர்களுக்கான தினம் என தெரியப்படுத்துங்கள்.
* பரிசை விரும்பாத குழந்தைகளே இல்லை. நீங்கள் அளிக்கும் பரிசு பசுல், ரூபீக் கியூப் என கல்வி சார்ந்ததாகவோ அல்லது அவர்கள் நீண்ட நாட்களாக விரும்பிய பொருளாகவோ இருக்கலாம்.
* அனிமேசன், காமெடி என குழந்தைகளுக்கு பிடித்த திரைப்படத்தை ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம். உங்களுடன் பிடித்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமாக குழந்தைகள் கருதுவார்கள்.
* குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்து கொடுங்கள். சிறிய வேலைகளில் அவர்களையும் ஈடுபடுத்துங்கள்.மகிழ்ச்சியான உரையாடல் குழந்தைகளை மேலும் குஷிப்படுத்தும்.

* பழைய நினைவுகளை திரும்ப பார்ப்பது அழகான விஷயம். குடும்பமாக அமர்ந்து, உங்களின் குழந்தைகால புகைப்படங்களை காட்டுங்கள்.
* உங்கள் குழந்தைப் பருவ கதைகளை மனம் திறந்து சொல்லுங்கள். உங்கள் காலத்தில், குழந்தைப் பருவம் எப்படி வித்தியாசமாக இருந்தது. பள்ளிக்காலம் எப்படி இருந்தது என, அவர்களிடம் பகிருங்கள்.
* வேலை காரணமாக ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க முடியாவில்லை என்றாலும், அருகிலிருக்கும் பார்க், உணவகம், ஐஸ்கிரீம் பார்லர் என, வெளியே சில மணிநேரங்களாது ஒன்றாக செலவிடுங்கள்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X