பொது செய்தி

தமிழ்நாடு

ஒப்பந்ததாரர் தேர்வு: அதிகாரிகளுக்கான நிதி உச்சவரம்பு அதிகரிப்பு

Added : நவ 13, 2021
Share
Advertisement
சென்னை: பொதுப் பணித் துறையின் பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய, அதிகாரிகளுக்கான நிதி உச்சவரம்பை அதிகரித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. பொதுப் பணித் துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் வாயிலாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் தேர்வு

சென்னை: பொதுப் பணித் துறையின் பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வு செய்ய, அதிகாரிகளுக்கான நிதி உச்சவரம்பை அதிகரித்து, அரசு உத்தரவிட்டு உள்ளது.

பொதுப் பணித் துறை வாயிலாக, பல்வேறு துறைகளுக்கான கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்ள உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் வாயிலாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். உதவி செயற்பொறியாளர்கள் ஒரு லட்சம் ரூபாய்; செயற்பொறியாளர்கள் 30 லட்சம் ரூபாய்; கண்காணிப்பு பொறியாளர்கள் ஒரு கோடி ரூபாய் வரையும் திட்டமதிப்பீடு தயார் செய்து, ஒப்பந்ததாரரை தேர்வு செய்யலாம்.பெரும்பாலான பணிகள் பல லட்சம் ரூபாய் மற்றும் கோடி ரூபாய்களில் மேற்கொள்ளப்படுகிறது.

ஒப்பந்தபுள்ளி நிதி உச்சவரம்பு குறைவாக இருப்பதால், பல பணிகளை விரைந்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, தொழிற்நுட்ப ஒப்புதல் மற்றும் ஒப்பந்தபுள்ளி ஒப்புதலுக்கான அதிகார உச்சவரம்பை அரசு உயர்த்தி உள்ளது.அதன்படி, உதவி செயற்பொறியாளர் 2 லட்சம் ரூபாய்; செயற்பொறியாளர் 50 லட்சம் ரூபாய்; கண்காணிப்பு பொறியாளர்கள் 2 கோடி ரூபாய் வரை திட்டமதிப்பீடு தயார் செய்து,ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பொதுப் பணித் துறை செயலர் தயானந்த கட்டாரியா பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X