முன் வரி பாக்கி மைசூரு மாநகராட்சி நடவடிக்கைக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மகேஷ் அதிருப்தி

Added : நவ 13, 2021
Share
Advertisement
மைசூரு:தொழில் நிறுவனங்கள் முன் வரி பாக்கி போர்டு வைத்துள்ள மைசூரு மாநகராட்சி நடவடிக்கைக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மகேஷ் அதிருப்தியடைந்துள்ளார்.இது குறித்து மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:மைசூரு மாநகராட்சியில் 'துக்ளக் தர்பார்' நடக்கிறது. மைசூரில் விதிமுறைகளை மீறி வரி வசூலிக்கப்படுகிறது. பெங்களூரிலேயே இந்த அளவில் வரி வசூலிக்கவில்லை. மைசூரில் கூடுதல் வரி

மைசூரு:தொழில் நிறுவனங்கள் முன் வரி பாக்கி போர்டு வைத்துள்ள மைசூரு மாநகராட்சி நடவடிக்கைக்கு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மகேஷ் அதிருப்தியடைந்துள்ளார்.

இது குறித்து மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:மைசூரு மாநகராட்சியில் 'துக்ளக் தர்பார்' நடக்கிறது. மைசூரில் விதிமுறைகளை மீறி வரி வசூலிக்கப்படுகிறது. பெங்களூரிலேயே இந்த அளவில் வரி வசூலிக்கவில்லை. மைசூரில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கூடுதல் வரி விதிக்க, அதிகாரம் கொடுத்தது யார். ஏற்கனவே மைசூரில் எட்டு திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. தொழில்கள் நலிவடைந்து உள்ளன.

மாநகராட்சி மனம் போனபடி, வரி வசூலித்தால் பொது மக்களின் கதி என்ன.எனது கன்வென்ஷன் ஹாலுக்கு விதிமுறைப்படி 4 லட்சம் ரூபாய் வரி விதிக்க வேண்டும். ஆனால் மைசூரு மாநகராட்சி 8.75 லட்சம் ரூபாய் வரி விதித்துள்ளது. அதிக வரி விதித்தது பற்றி பல தொழிலதிபர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். எனவே ஐந்தாறு ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை.

விதிமுறைப்படி வரி விதித்தால் அனைவரும் வரி கட்டுவர். ஆனால் சட்டவிரோதமாக அடக்குமுறையை கையாள்வது தவறு. வரி கட்டவில்லை என தொழில் நிறுவனங்களின் முன், போர்டு வைத்து அவமதிப்பது சரியல்ல.இதனால் அமைதி, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டால் மாநகராட்சியே நேரடி பொறுப்பாகும்.தொழில் நிறுவனங்கள் முன் வரி பாக்கி போர்டு வைத்துள்ளது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X