சர்க்கரை நோயாளிகளின் பாதத்தை காக்கும் காலணி| Dinamalar

சர்க்கரை நோயாளிகளின் பாதத்தை காக்கும் காலணி

Added : நவ 13, 2021
Share
வடகோவை, பொன்னே கவுண்டர் வீதியில் அமைந்துள்ளது, 'டயாபுட்' நிறுவனம்.இதன் நிர்வாக இயக்குனர் மோகன் கூறியதாவது:ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையென்றால், கால்களுக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், சர்க்கரையால் பாதிக்கப்பட்டவருக்கு, சில ஆண்டுகளில், காலில் உள்ள, செல்லுலர் அமைப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது.மொத்த உடலின் எடையும், பாதத்துக்குச்

வடகோவை, பொன்னே கவுண்டர் வீதியில் அமைந்துள்ளது, 'டயாபுட்' நிறுவனம்.இதன் நிர்வாக இயக்குனர் மோகன் கூறியதாவது:ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லையென்றால், கால்களுக்கு போதுமான அளவு ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், சர்க்கரையால் பாதிக்கப்பட்டவருக்கு, சில ஆண்டுகளில், காலில் உள்ள, செல்லுலர் அமைப்பு பாதிக்கப்படும் நிலை உள்ளது.மொத்த உடலின் எடையும், பாதத்துக்குச் செல்வதால், அழுத்தம் ஏற்பட்டு, புண்கள் ஏற்படுகின்றன. இதை தடுத்து, பாதத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், மைக்ரோ செல்லுலர் முறையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு காலணிகளை தயாரித்து, விற்பனை செய்கிறோம்.டாக்டரின் பரிந்துரைப்படி, ஆப்லோடிங் சிறப்பு காலணிகளை அணிந்து, கால்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பாதத்தில் ஏற்படும் புண், ஆணி உள்ளிட்டவற்றில் இருந்து கால்களை பாதுகாக்க, நடைபயிற்சிக்கென்றே பிரத்யேகமாக நாங்கள் தயாரித்து வழங்கும் காலணிகளை அணிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93600 65556, 99659 11011

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X