ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Updated : நவ 13, 2021 | Added : நவ 13, 2021 | கருத்துகள் (2)
Advertisement
தர்மபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் நாளை வெளியேற்றப்பட உள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதை அடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீரின் அளவு 25 ஆயிரம் கன

தர்மபுரி:ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் நாளை வெளியேற்றப்பட உள்ளது.



latest tamil news



காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதை அடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கல் பகுதியில் காவிரி நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணை நாளை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி விடும் என்றும், தற்போது வரையில் 119.4 அடியாக உள்ளது பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.


latest tamil news



உபரி நீர் திறப்பு


மேட்டூர் அணை நிரம்பிய உடன் உபரி நீர் உடனடியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்படும். இதனையடுத்து காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில்வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
13-நவ-202123:35:57 IST Report Abuse
vns இந்த வருடம் த்ரவிஷங்கள் கர்நாடகாவிடம் தண்ணீருக்காக போராடாது.
Rate this:
Cancel
13-நவ-202121:06:20 IST Report Abuse
ஆரூர் ரங் இனிமே காவிரி மேட்டருல கர்நாடக பிஜெபி அரசை குறை சொல்ல முடியாது.😂 பெரியாறு அணை விஷயத்தில் கேரளாவை திட்டலாம்ன்னு பாத்தா கம்மிகள்😗 முறைப்பாங்க . மத்திய அரசு என்னடான்னா கேரளா பணிந்து போகணும் ஆலோசனை சொல்லிட்டாங்க . இப்போ திமுக வின் தலைவலி😇 தான் உருவாக்கும் பிரச்னைகளுக்கு யார் மீது பழி போடுவதுனு புரியல😇😇. இருக்கவே இருக்கு ஹிந்தி ஒழிக. சமஸ்கிருதம் ஒழிக
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X