பொது செய்தி

இந்தியா

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெறாதோர் 5 லட்சம் பேர்

Added : நவ 13, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரில் இதுவரை 5 லட்சம் மக்கள்,இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெறவில்லை. இவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது.கொரோனா தொற்று தடுப்பூசி பற்றி ஆரம்பத்தில் தவறான எண்ணத்தால் பலரும் தயங்கினர். சுகாதாரத்துறையின் தொடர் விழிப்புணர்வால் பெற முன் வந்தனர்.தற்போது தொற்று கட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், மக்கள்

பெங்களூரு:பெங்களூரில் இதுவரை 5 லட்சம் மக்கள்,இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெறவில்லை. இவர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத்துறை திணறுகிறது.

கொரோனா தொற்று தடுப்பூசி பற்றி ஆரம்பத்தில் தவறான எண்ணத்தால் பலரும் தயங்கினர். சுகாதாரத்துறையின் தொடர் விழிப்புணர்வால் பெற முன் வந்தனர்.தற்போது தொற்று கட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பியதால், மக்கள் கொரோனா தடுப்பூசியை அலட்சியப்படுத்துகின்றனர்.குறிப்பாக முதல் டோஸ் பெற்றவர்கள், 2வது டோஸ் பெறுவதில் அக்கறை காண்பிக்கவில்லை. மாநிலம் முழுவதும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர், இன்னும் பெறவில்லை.

இது போன்றவர்கள், பொது இடங்கள், பணியிடங்களுக்கு வருவதற்கு, தடை விதிக்கும்படி கொரோனா தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா,கூறியதாவது:முந்தைய வாரம் வரை ஆறு லட்சம் பேர், 2வது டோஸ் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும். ஆனால் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர், இதுவரை 2வது டோஸ் பெறவில்லை. தொற்று குறைந்துள்ளதால் தடுப்பூசி தேவையில்லை என சிலர் கூறுகின்றனர்.

இத்தகையவர்களை தொடர்பு கொண்டு, தடுப்பூசி பெறும்படி கூறப்படுகிறது. வீடு, வீடாக சென்று தடுப்பூசி பெறும்படி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.2வது டோஸ் பெறாதவர்கள் பொது இடங்கள், பணியிடங்களுக்கு வருவதற்கு தடை விதிக்கும்படி கொரோனா தொழில் நுட்ப ஆலோசனை கமிட்டி, சிபாரிசு செய்துள்ளது.

கொரோனா தொற்று இன்னும் முழுமையாக மறையவில்லை. தொற்று அறிகுறி உள்ளோர், தாங்களாகவே முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.தற்போது மக்கள் முக கவசம் அணியாமல் நடமாடுகின்றனர். பலரும் தங்களின் ஆரோக்கியத்தை அலட்சியப்படுத்துகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சையும் பெறுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X