கோவை - மருதமலை ரோடு, ஐ.ஓ.பி., காலனி, எஸ்.ஜே., கார்டனில் அமைந்துள்ளது, கோயம்புத்துார் டயபடிஸ் பவுண்டேஷன் மருத்துவமனை (சி.டி.எப்.,).இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகதீஸ்வர் கூறியதாவது:சர்க்கரை பாதிப்பு குறித்து, பெரும்பாலான மக்களின் பார்வை மற்றும் கருத்து, 'இன்சுலின் அல்லது மாத்திரை எடுத்துக்கொண்டால் போதுமானது; அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே சிகிச்சை முறை' என்பதாக இருக்கிறது. இது, தவறானது. விழிப்புணர்வு இல்லாதது, தகுந்த சிகிச்சை இல்லாததால், இதுபோன்ற கருத்து வருகிறது.சர்க்கரை பாதிப்பு ஒவ்வொரு நோயாளிக்கும் மாறுபடும். ஒருவரின் சிகிச்சை முறை, அவரின் தனித்துவமான உடல் தன்மை, நோயின் தன்மை, வாழ்க்கை முறையை பொறுத்து மாறுபடும். கோயம்புத்துார் டயபடிஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் அளிக்கும் சிகிச்சை முறை, கல்வி முறை தனித்துவம் வாய்ந்தவை. கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சிகிச்சை, ஆரோக்கிய கல்வியை அளிப்பதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93631 23295
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE