கடைக்கு தீவைத்த ஆசாமி சிகரெட் விவகாரத்தில் வில்லங்கம்| Dinamalar

கடைக்கு தீவைத்த ஆசாமி சிகரெட் விவகாரத்தில் 'வில்லங்கம்'

Added : நவ 13, 2021
Share
திருப்பூர்: திருப்பூரில், 'சிகரெட்' வாங்கிய போது ஏற்பட்ட தகராறில், மளிகை கடைக்கு தீ வைத்து சென்ற போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவை சேர்ந்தவர் செந்தில்குமார். மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் சிகரெட் வாங்குவதற்காக போதை ஆசாமி ஒருவர் சென்றார். 500 ரூபாய் கொடுத்தார்.கடைக்காரர், 'சில்லறை இல்லை' என



திருப்பூர்: திருப்பூரில், 'சிகரெட்' வாங்கிய போது ஏற்பட்ட தகராறில், மளிகை கடைக்கு தீ வைத்து சென்ற போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவை சேர்ந்தவர் செந்தில்குமார். மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில் சிகரெட் வாங்குவதற்காக போதை ஆசாமி ஒருவர் சென்றார். 500 ரூபாய் கொடுத்தார்.கடைக்காரர், 'சில்லறை இல்லை' என கூறினார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின், போதை ஆசாமி கிளம்பி சென்றார்.நேற்று காலை மீண்டும் கடைக்கு சென்ற போதை ஆசாமி, திடீரென பாட்டிலில் இருந்த மதுவை, கடையின் ஷட்டரில் ஊற்றி தீ வைத்து சென்றார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். கடைக்குள் இருந்த பல லட்சம் ரூபாய் பொருட்கள் தப்பின.வீரபாண்டி போலீசார் கூறுகையில், 'சிசிடிவி பதிவை கைப்பற்றி, போதை ஆசாமி யார் என்று விசாரித்து வருகிறோம்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X